கிளீன் போல்டில் நான்தான் கில்லி என நிரூபித்த முகமது சமி வீடியோ இணைப்பு!

0
370

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே டிராவஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார் முஹம்மத் சிராஜ். அதன் பிறகு ஜோடி சேர்ந்த மிச்சல் மார்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டனர். அந்த அணி 77 ரன்களை எடுத்திருந்தபோது 22 ரன்களை எடுத்து இருந்த ஸ்மித் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கேஎன் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

மறுமுனையில் சிறப்பாக ஆடிய மிச்சல் மார்ஸ் அதிரடியாக ஆடி தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இவர் களத்தில் இருக்கும்போது ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய ஸ்கோரை எப்போது போல் இருந்தது. ரவீந்திர ஜடேஜாவின் அருமையான பந்து வீச்சினால் 81 ரன்களில் முகமது சிராஜ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் மார்ஸ் .

இதனைத் தொடர்ந்து ஆட வந்த மார்னஸ் லபுசேன் 20 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கேமரூன் கிரீன் மற்றும் இங்கில்ஷ் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.

ஆனால் முகமது சமி தன்னுடைய அபாரமான பந்துவீச்சின் மூலம் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை தடம் புரளச் செய்தார். ஒரு கட்டத்தில் 133 ரண்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலியா அடுத்த 45 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

சமீ வீசிய 29ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் கேமரூன் கிரீன் விக்கெட்டை கிளின் போல்ட் முறையில் வீழ்த்தினார். அப் ரைட் ஸீம் பொசிஷனில் வீசப்பட்ட பந்து ஆடுகளத்தில் மோதி பேட்ஸ்மேன் அவுட் சைடு எட்ஜை தாண்டி சென்று ஆப்
ஸ்டம்பை சிதறச் செய்தது. இந்த விக்கெட் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.