2-வது ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ் அசத்தல்; டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்குமா?

0
118
Siraj

தென்ஆப்பிரிக்கா அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. தற்பொழுது இதில் ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்று இருந்தது!

இந்தநிலையில் தொடரின் இரண்டாவது போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மைதானத்தில் இன்று மதியம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ருத்ராஜ் மற்றும் ரவி நீக்கப்பட்டு சபாஷ் அகமத் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் கேப்டன் பவுமா மற்றும் சம்சி வெளியே போய் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் அண்ட்ரிச் நோர்க்கியா இருவரும் வந்திருக்கிறார்கள். இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கேசவராஜ் முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் சிராஜ் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதற்கடுத்து ஜே மலான் அறிமுக வீரர் ஷாபாஸ் அகமது பந்தில் ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து ஜோடி சேர்ந்த விசா ஹென்றிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சிறப்பாக விளையாடிய ரீசா ஹென்ரிசை 74 முகமது சிராஜ் வெளியேற்றினார். 79 ரன்களில் மார்க்ரம்மை வாசிங்டன் சுந்தர் வெளியேற்றினார். அடுத்துவந்த கடந்த ஆட்ட ஆட்டநாயகன் கிளாஸனை குல்தீப் யாதவ் இந்த முறை சீக்கிரத்தில் ஆட்டமிழக்க வைத்தார். இதுவெல்லாம் தொடர்ச்சியாக நடந்தது இந்திய அணிக்கு ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

இதனால் கில்லர் மில்லரின் கைகள் கட்டப்பட்டது. அவரால் தொடர்ந்து அதிரடியாக விளையாட முடியவில்லை. அவருடன் இணைந்த பர்னலை ஷர்துல் தாகூரும், கேஷவ் மஹராஜை முகமது சிராஜூம் வெளியேற்ற, 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 278 ரன்கள் சேர்த்தது. மில்லர் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

பேட்டிங் செய்ய எளிதான, வேகப்பந்து வீச்சுக்கு கடினமான ஆடுகளத்தில் முகமது சிராஜ் 10 ஓவர்கள் பந்து வீசி 38 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 48வது ஓவரில் ஆறு ரன்களையும், 50-ஆவது ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்து அசத்தினார். இவரது இறுதிக்கட்ட ஓவர் சமீபக் காலத்தில் மிகச் சிறப்பாக மாறி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கான அணியில் பும்ரா இடத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -