இந்திய கிரிக்கெட்

நான் ஆசிய கோப்பையில் மைதான ஊழியர்களுக்கு பணம் கொடுக்க.. இவர்கள்தான் காரணம் – முகமது சிராஜ் பேட்டி

நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணி தேர்வில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கக் கூடிய ஒன்றாக அமைந்தது. அவர் தொடர்ச்சியாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்தான் அதிகம் விளையாடினார். இது குறித்து முகமது சிராஜ் பேட்டியளித்திருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இந்திய வேகப்பந்துவீச்சு கூட்டணியில் பும்ரா மற்றும் சமி இருவருடனும் முகமது சிராஜ் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். இந்தக் கூட்டணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மேலும் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் இந்தக் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு இருந்தது. ஆனால் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் முகமது சிராஜ் தேர்வு செய்யப்படுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

மேலும் முகமது சிராஜுக்கு 2023 ஆம் ஆண்டு பந்துவீச்சில் மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. குறிப்பாக அவருக்கு அந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடர் மிகவும் அருமையான ஒன்றாக இருந்தது. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அந்த அணியை 50 ரன்கள் சுருட்டுவதற்கு இவர் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். மேலும் இடைவிடாது வந்து தொந்தரவு செய்த மழையில் கடுமையாக உழைத்த, மைதான ஊழியர்களுக்கு தன்னுடைய பரிசுத் தொகையை கொடுத்தார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் முகமது சிராஜ் கூறும் பொழுது “என் பெற்றோர்கள் தேவை இருப்பவர்களுக்கு என்னை உதவச் சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய பார்வை எளிமையானது, நாங்கள் ஆசியக் கோப்பையில் விளையாடிய பொழுது மழை பெய்து கொண்டே இருந்தது. அவர்கள் கவர்களை அடிக்கடி கொண்டு வந்து நிறைய முயற்சி செய்தார்கள். அது எளிதான ஒரு விஷயம் கிடையாது. எனவே நான் அவர்களுக்கு பரிசு கொடுக்க நினைத்தேன்.

இதையும் படிங்க : 9வது இடத்தில் பேட்டிங் வந்த தோனி.. இதுதான் காரணமா?.. உண்மை தெரிந்து சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

இந்தியாவுக்காக உலகக் கோப்பையை விளையாடுவது ஒவ்வொரு வீரர்களின் கனவாகும். எனக்கு தற்பொழுது இந்த வாய்ப்பு உங்களின் ஆசிர்வாதத்தால் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் நான் எழும்பொழுது, உலகக் கோப்பையை வெல்வது தான் இலக்கு என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Published by