பழைய தோனி மீண்டும் வந்துவிட்டாரா ? தோனியின் ஃபார்ம் குறித்து முகமது கெய்ப்

0
85
Mohammad Kaif about MS Dhoni in IPL 2022

சென்னை அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மகேந்திர சிங் தோனி கேப்டனாக சிறப்பாக விளையாடி இருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. 2020ஆம் ஆண்டு 200 ரன்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டு 114 ரன்கள் என மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் 314 ரன்கள் மட்டுமே குவித்தார்.

இந்த ஆண்டும் அவர் சுமாராக விளையாடுவார் என்று அனைவரும் கனித்த நிலையில் அனைவரின் கணிப்பையும் சுக்குநூறாக்கி உள்ளார். சென்னை அணிக்கு 2 போட்டியிலும் மிக சிறப்பாக விளையாடி மொத்தமாக 66 ரன்கள் சேர்த்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 32 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து மொத்தமாக 50* ரன்கள் குவித்தார். அதேபோல லக்னோ அணிக்கு எதிராக 6 பந்துகளில் 16 ரன்கள் குவித்து முதல் போட்டி போலவே இந்தப் போட்டியிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த ஆண்டு பழைய மகேந்திர சிங் தோனியை பார்க்கப் போகிறோம்

மகேந்திர சிங் தோனி குறித்துப் பேசியுள்ள முகமது கைஃப், “தோனியை பார்த்து ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இந்த ஆண்டுடன் அவர் தன்னுடைய ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொள்ளப் போகிறார் என்று அனைவரும் ஒரு பக்கம் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இந்த வயதில் கடந்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடிய விதத்தை சற்று உற்று கவனியுங்கள்.

இரண்டு போட்டியிலும் அதிரடியாக விளையாடி அவ்வாறு பேசியவர்களை வாயடைக்கச் செய்துள்ளார். நிச்சயமாக இந்த தொடரில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழையை பொழியும் பழைய மகேந்திர சிங் தோனியை பார்க்கப் போகிறோம்”, என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.