11 சிறந்த வீரர்களைக் கொண்டு முகம்மது கைய்ப் தேர்ந்தெடுத்துள்ள 2022 ஐபிஎல் அணி – தினேஷ் கார்த்திக்கு இடமில்லை

0
245
Mohammad Kaif and Dinesh Karthik

2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான பதினைந்தாவது சீசனாக இந்த ஆண்டு மெகா ஏலத்திற்கான ஆண்டாக அமைந்தது. இந்த வருட ஐ.பி.எல் சீசனில் புதிதாக, லக்னோ நகரை மையமாக வைத்து உத்திர பிரதேச மாநிலத்தை அடையாளப்படுத்தும் விதமாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் என்ற அணியும், குஜராத் மாநிலத்தை அடையாளப்படுத்தும் குஜராத் டைட்டன்ஸ் என்ற அணியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டு புதிய அணிகளின் வருகையால் ஒவ்வொரு அணிகளும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளவும், புதிய அணிகள் மூன்று வீரர்களை ஏலத்திற்கு முன்பே எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் ஏலம் நடத்தப்பட்டு ஒவ்வொரு அணிகளும் புதிதாய் கட்டப்பட்டது.

கொரோனா தொற்று முழுமையாக ஒழியாத காரணத்தினால் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் லீக்கின் எழுபது ஆட்டங்கள் மும்பை, நவிமும்பை, புனே நகரங்களிலும், ப்ளேஆப்ஸின் இரண்டு போட்டிகள் கொல்கத்தாவிலும், இரண்டு போட்டிகள் குஜராத் அகமதாபாத்திலும் நடத்தப்படுவதாகத் தீர்மானித்து, மார்ச் 26ஆம் தேதி ஆரம்பித்து, மே 29ஆம் தேதி வரை நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

தற்போது இதன்படி எழுபது லீக் போட்டிகளும், கொல்கத்தாவின் இரண்டு ப்ளேஆப்ஸ் போட்டிகளும் முடிவடைந்து, குஜராத், ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் குஜராத்தின் அகமதாபாத்தில் முகாமிட்டு இருக்கின்றன. ராஜஸ்தான் அணியோடு பெங்களூர் மோதும் போட்டி மே 27ஆம் தேதியும், இதில் வெல்லும் அணி குஜராத் அணியோடு மோதும் இறுதிபோட்டி மே 29ஆம் தேதியும் நடக்க இருக்கிறது.

இந் வருட ஐ.பி.எல் சீசன் ஏறக்குறைய 95% முடிவடைந்திருக்க, இந்திய அணியின் முன்னாள் வீரர் மொகம்மத் கைய்ப் இந்த ஆண்டி ஐ.பி.எல் சீசனுக்கான தன் அணியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவரது அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும், கேப்டன் கே.எல்.ராகுலும் இருக்க, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடங்களில் டேவிட் வார்னர், ராகுல் திரிபாதி, லியாம் லிவிங்ஸ்டன் இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்களாக ரஷீத்கான், யுஸ்வேந்திர சஹாலும், வேகப்பந்து வீச்சாளர்களாக இந்தியாவின் உம்ரான் மாலிக், ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் ஷமி இருக்கிறார்கள்!