அனைத்து காலகட்டத்திற்கும் ஏற்ற சிறந்த ஐபிஎல் அணி இதுதான் – முகமது கைஃப் தேர்வு செய்துள்ள 11 வீரர்கள்

0
3733
Mohammad Kaif and MS Dhoni

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தற்பொழுது ஐபிஎல் தொடரில் அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். மகேந்திர சிங் தோனியை கேப்டனாக அவர் பெயரிட்டு இருப்பது தோனி ரசிகர்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தி உள்ளது.

ஓபனிங் வீரர்கள் :

முகமது கைஃப் தன்னுடைய அணிக்கு ஓபனிங் வீரர்களாக மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இதுபற்றி விளக்கம் அளித்த அவர் கிறிஸ் கெயில் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன். ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வந்தாலே எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சற்று பயம் ஏற்படும். அதேசமயம் மறுபக்கம் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை வென்று இருக்கிறார். டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் அவர் அற்புதமான வீரர்.

- Advertisement -
மூன்றாவது இடத்தில் விராட் கோலி :

மூன்றாவது வீரராக விராட் கோலியை கைஃப் தேர்வு செய்துள்ளார். ஒன் டவுன் வீரராக களமிறங்கி விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட ரன்கள் குவித்திருக்கிறார். எனவே இந்த இடத்தில் விராட் கோலி விளையாடுவது சரியான தீர்வாக இருக்கும் என்று விளக்கமளித்துள்ளார்.

மிடில் ஆர்டர் வீரர்கள் :

மிடில் ஆர்டர் வீரர்களாக சுரேஷ் ரெய்னா ஏபி டிவிலியர்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனியை முகமது கைஃப் தேர்வு செய்து உள்ளார். சுரேஷ் ரெய்னா மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் அவர்கள் விளையாடிய அணிக்கு மிடில் ஆர்டரில் பல சிக்கலான சமயங்களில் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றனர்.

அதேபோல 2007ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரை வென்ற பின், இந்தியாவில் டி20 கிரிக்கெட் போட்டிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை மகேந்திர சிங் தோனி அமைத்தார். அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் தொடர்ச்சியாக மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்த அணிக்கு அவர் கேப்டனாக இருப்பது சரியான தீர்வாக இருக்கும் என்று கூறி தனது அணியின் கேப்டன் பதவியையும் தோனிக்கு கொடுத்துள்ளார்.

- Advertisement -
ஆல்ரவுண்டர் வீரர்கள் :

ஆல்ரவுண்டர் வீரர்கள் இடத்தில் ஆண்ட்ரூ ரசல் மற்றும் ரஷீத் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் எதிரணியை உருக்குலைய வைக்கும் ஆற்றல் ரசலிடம் உள்ளது. மறுபக்கம் ரஷீத் கான் தன்னுடைய அபாரமான பந்து வீச்சின் மூலமாக எதிரணியை கட்டுப்படுத்துவார்.

பந்து வீச்சாளர்கள் :

பந்து வீச்சாளர்கள் இடத்தில் சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் லசித் மலிங்க ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் தொடரைப் பொருத்த வரையில் இவர்கள் மூவரும் தொடர்ச்சியாக அனைத்து போட்டியிலும் மிக சிறப்பாக செயல்பட கூடிய திறமைப் பெற்றவர்கள்.

முகமது கைஃப் தேர்வு செய்த அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த ஐபிஎல் அணி :

கிறிஸ் கெயில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா,ஏபி டிவில்லியர்ஸ்,மகேந்திர சிங் தோனி(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரூ ரசல்,ரஷீத் கான், சுனில் நரைன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் லசித் மலிங்கா