ஐபிஎல் 2024

கில்லுக்கு இந்த சாதாரண கணக்கே புரியல.. நிச்சயம் நைட் அவர் தூங்க மாட்டாரு – முகமது கைஃப் விமர்சனம்

நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் கேப்டன்சி மிகவும் சுமாராக இருந்தது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முகமது கைஃப் இருவரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று சுப்மன் கில் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது சரியானதாக இருந்தது. பவர் பிளேவை இரண்டு பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து சிறப்பாகவும் முடித்தார். அதே சமயத்தில் தொடர்ச்சியாக நான்காவது ஓவரை அசமத்துல்லா ஓமர்சாய்க்கு கொடுத்தது சரியானதாக இல்லை. ஏதாவது தேவைக்காக கடைசிக்கட்ட ஓவர்களுக்கு, அவரது ஒரு ஓவரை நிறுத்தி இருக்கலாம்.

அதே சமயத்தில் ரஷித் கான் ஓவரை 15 ஓவருகளுக்குள் கில் நேற்று முடித்து விட்டார். இதன் காரணமாக இறுதிக்கட்ட ஓவர்களில் ரஷித் கான் இல்லை. அதே சமயத்தில் மூன்று ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டு தந்து மூன்று விக்கெட் கைப்பற்றிய சந்தீப் வாரியருக்கு, மீதம் இருந்த ஒரு ஓவரை கில் கொடுக்கவில்லை.

அதே சமயத்தில் இடது கை பேட்ஸ்மேன்கள் அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட் விளையாடுவதால், இடது கை சுழல் பந்துவீச்சாளர் சாய் கிஷோருக்கு ஓவர் தரக்கூடாது என வீண் பிடிவாதத்துடன் கில் இருந்தார். இந்த நிலையில் அக்சர் படையல் ஆட்டம் இழக்க, தேவையே இல்லாமல் 19ஆவது ஓவரை சாய் கிஷோருக்கு கொடுத்தார். அந்த ஓவரில் வலது கை பேட்ஸ்மேன் ஸ்டப்ஸ் மட்டுமே சாய் கிஷோரை 21 ரன்களுக்கு அடித்தார். இப்படி கேப்டனாக நேற்று கில் நிறைய தவறுகள் செய்தார்.

- Advertisement -

இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறும் பொழுது “கில் இன்று தூங்க மாட்டார். மூன்று டாப் ஆர்டர்கள் பேட்ஸ்மேன் விக்கெட்டை கைப்பற்றிய சந்தீப் வாரியருக்கு வெறும் மூன்று ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர் அந்த மூன்று ஓவர்களிலும் 15 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்தார். மேலும் கடைசி இரண்டு ஓவர்களில் குஜராத் நிறைய ரன்களை விட்டுத்தந்தது. இந்த இடத்தில் கில் மிகப் பெரிய தவறுகளை செய்து விட்டார்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : 5 ஓவருக்கு 100 ரன் சட்டவிரோதமானது.. பவுலர்களுக்கு பணம் கொடுத்து கூட்டி வந்து அழிக்கிறாங்க – வாசிம் அக்ரம் பேட்டி

மேலும் இது குறித்து பேசி இருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது “இது ஒரு எளிய கணக்கு. ஆனால் கில் அதிலேயே பெரிய தவறு செய்தார். சந்தீப் வாரியர் மூன்று விக்கெட் கைப்பற்றிய பொழுதும் அவருக்கு நான்காவது ஓவரை கில் தரவில்லை. சாய் கிஷோர் குஜராத் அணிக்கு கடந்த போட்டியில் ஆட்டநாயகனாக இருந்தார். ஆனால் அவருக்கு 19 ஆவது ஓவரில்தான் வாய்ப்பு தரப்பட்டது. அந்த குறிப்பிட்ட இரண்டு ஓவர்களில் மட்டும் 53 ரன்கள் சென்றது” என்று கூறி இருக்கிறார்.

Published by