இந்திய கிரிக்கெட்

விராட் கோலியை அவங்க மதிக்கல.. நம்பிக்கையும் வைக்கல.. பின்ன அவர் என்ன செய்வார்? – கைப் கேள்வி

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு முடிவு மற்றும் அணியின் சூழல் குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​கோலியின் டெஸ்ட் ஓய்வு மற்றும் சூழ்நிலை குறித்து முகமது கைஃப் பேசும்போது, “அவரது நேர்காணல்களைப் பார்க்கும் போது அவரது முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிகிறது. அவரது பார்ம் மோசமாக இருந்திருந்தாலும், நாம் பேசுவது விராட் கோலியைப் பற்றி. ஒருநாள் போட்டிகளில்கூட அவருக்கு சில மோசமான கட்டங்கள் வந்திருக்கின்றன. அவரது பேட்டிகளைப் பார்த்தால் அவர் அங்கிருந்த சூழலில் மகிழ்ச்சியாக இல்லை என்று தோன்றுகிறது”

“அவருக்கு அங்கு உரிய முக்கியத்துவமும் ஆதரவும் கிடைக்கவில்லை என்றும், உள்ளே இருப்பவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றும் அவர் உணர்ந்தது போல் தெரிகிறது. அவர் தொடர்ந்து விளையாடியிருந்தால் கண்டிப்பாக கம்பேக் கொடுத்திருப்பார் என்று நான் இப்போதும் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை டக் அவுட் ஆன பிறகு அவரை நீக்கியிருந்தால், இப்போது அவரது இந்த இன்னிங்ஸைப் பாராட்டி இருக்க முடியுமா? ஒரு புதிய வீரர் என்றால் என்னால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் இவர் விராட் கோலி. மற்றவர்களுக்குப் பயன்படுத்துவதை இவருக்கும் பயன்படுத்தக் கூடாது. யாருக்கு வேண்டுமானாலும் பார்ம் அவுட் ஆகலாம், யாரும் மிஷின் கிடையாது, இது வீடியோ கேமும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் கோலியின் எதிர்காலம் குறித்துப் பேசிய கைஃப், “உலகக் கோப்பை வரை மட்டுமே விளையாடப்போவதாக அவர் கூறியுள்ளார். அவர் விளையாடும் விதத்தைப் பார்த்தால் 100 சதங்களுக்கு அருகில் செல்வார். ஆனால் உலகக் கோப்பை வரும்போது, முடிவெடுப்பவர்கள் அவர் நல்ல பார்மில் இருப்பதால் விலக வேண்டாம் என்று கூறவும் வாய்ப்புள்ளது. இது அவரது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என நான் நினைக்கிறேன், ஆனால் அதையும் தாண்டி அவரால் விளையாட முடியும். அவர் ஃபிட்டாக இருக்கிறார், ரன்களும் அடிக்கிறார். இது இளம் கேப்டனான கில்லுக்கு உதவியாக இருக்கும். பந்துவீச்சை பாருங்கள், மூத்த வீரர்கள் இல்லாததால் கில் கடினமான சூழலைச் சந்திக்கிறார். கோலி எவ்வளவு காலம் நீடிக்கிறாரோ, அது கேப்டனாக கில்லுக்கும் இந்திய அணிக்கும் நல்லது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by

Recent Posts