கடந்த 2 போட்டிகளாக சென்னை அணியில் மொயின் அலி இடம்பெறாத காரணம் இதுதான் – மேலும் சில போட்டிகளில் இருந்தும் விலகல்

0
943
Moeen Ali CSK

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றன. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 88* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாகும். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளில் அந்த அணி 6 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

இன்னிலையில் கடந்த போட்டியிலும் சரி இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டியிலும் சரி அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் மொயின் அலி அணியில் இடம்பெறவில்லை.

மொயின் அலி இடம்பெறாத காரணம் இதுதான்

சென்னை அணி கேம்பில் பயிற்சி செய்து கொண்டிருந்த வேளையில் கணுக்காலில்
மொயின் அலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது அதன் காரணமாகவே கடந்த போட்டியிலும், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியிலும் அவர் இடம் பெறவில்லை என்கிற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

மருத்துவ குழுவின் பரிந்துரையின்படி ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததும் அவருடைய காயம் பற்றிய கூடுதல் தகவல் நமக்கு கிடைக்கும். காயம் சற்று தீவிரமாக இருந்தால் நிச்சயமாக நிறைய போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹர் மற்றும் ஆடம் மில்னே காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் 3வது வீரராக மொயின் அலியும் ஏறக்குறைய ஐபிஎல் தொடரில் இருந்து வெளியெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மொயின் அலி 5 போட்டிகளில் விளையாடி 87 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார் நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 17.4 ஆக மட்டுமே உள்ளது. பந்து வீச்சிலும் இதுவரை எந்த ஒரு விக்கெட்டும் அவர் கைப்பற்றவில்லை.

தற்பொழுது அவருடைய இடத்தில் நியூசிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரர் மிட்செல் சான்ட்னர் விளையாடி வருகிறார். மூன்று போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகளையும், ஒரு இன்னிங்சில் 11 ரன்கள் இவர் தற்போது வரை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.