டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்ததற்கு காரணம் இது தான் – மொயீன் அலி விளக்கம்

0
603
Moeen Ali

உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் ஐபிஎல் தொடர் பக்கம் தற்போது திரும்பியிருக்கிறது. ஏற்கனவே இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டாலும் அடுத்த இரண்டு இடங்களை பிடிப்பதற்கு பல அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படி பலரும் ஐபிஎல் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான தொடரில் மொயின் அலி இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். இதுவரை அறுபத்தி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2914 ரன்களை குவித்துள்ளார். 14 முறை சதமும் ஐந்து முறை சதமும் அடித்துள்ளார் மொயின் அலி. பந்து வீச்சிலும் 195 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் 5 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கூடவே 40 கேட்சுகளையும் இவர் பிடித்துள்ளார்.

- Advertisement -

ஓய்வுபெற்ற இவர் பேசும் பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் பவுலிங் பீல்டிங் என மூன்றிலும் என்னிடமிருந்து பங்களிப்பை அணி எதிர்பார்க்கிறது என்றும் தற்போது நான் எவ்வளவு முயன்றும் அதை தர முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இவர் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் விளையாட நினைத்திருந்தார். காரணம் இரண்டு முக்கிய மைல் கற்களை அவர் எட்டிப்பிடிக்க அந்த 5வது டெஸ்ட் போதுமானதாக இருந்திருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மட்டும் 200 விக்கெட்டுகள் என்ற சாதனையை படைக்க மொயீன் அலி நினைத்திருந்தார். ஆனால் ஐந்தாவது டெஸ்ட் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த முடிவை அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் இனிமேல் அவருக்கு அதிக சுமை இருக்காது என்றும் அதனால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பங்களித்து அணியை வெற்றி பெற வைக்க முடியும் என்றும் சென்னை ரசிகர்கள் தற்போது நம்பி வருகின்றனர். இந்த நம்பிக்கை எந்த அளவு உண்மை ஆகிறது என்பதை ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் காணலாம்.

- Advertisement -