சிஎஸ்கே ! சிஎஸ்கே ! என கோஷமிட்ட ரசிகர்கள் – பதிலுக்கு மொயின் அலி செய்த காரியம்

0
5129
Moeen Ali CSK

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4வது போட்டி தற்போது ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி தொடரில் முன்னிலை பெறும். இதன் காரணமாக இரண்டு அணிகளுமே வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் சிறப்பாக ஆடி வருகிறது. ரசிகர்களுக்கும் ஆட்டம் விறுவிறுப்பாக செல்வதன் காரணமாக மிகவும் கொண்டாட்டமான சூழல் நிலவி வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடாததால் இந்திய அணி 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் கீழ் வரிசையில் ஷர்துல் தாகூர் சிறப்பாக ஆடி அவர் பங்குக்கு ஒரு அரைசதம் அடிக்க, ஆட்டம் சூடு பிடித்தது.

அதன் பின்பு ஆடிய இங்கிலாந்து அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. துவக்க வீரர்கள் இருவரையும் பும்ரா வெளியேற்றினார். இந்த தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை உமேஷ் சிறப்பாக பந்து வீசி பவுல்ட் ஆக்கினார். ஆனால் அதன் பின்பு வந்த மிடில் ஆர்டர் வீரர் ஆலி போப் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்க பலமாக வோக்ஸ், பேர்ஸ்ட்டோ, மொயீன் அலி ஆகியோர் ஆட இங்கிலாந்து அணி இந்திய அணியை விட முதல் இன்னிங்சில் 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதன் பின்பு மீண்டும் இங்கிலாந்து அணி ஃபீல்டிங் செய்ய வரும் போது ஒரு ருசிகர சம்பவம் நடந்தது. எல்லைக் கோட்டுக்கு அருகே மொயீன் அலி ஃபீல்டிங் செய்ய வந்ததும் அங்கு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சிஎஸ்கே சிஎஸ்கே என கோஷமிட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி பார்த்த மொயீன் அலி ரசிகர்களை நோக்கி “thumps up” காட்டினார். இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நான்காவது டெஸ்ட் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. மூன்றாம் நாள் ஆட்டம் தான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் அதைக் காண ஆவலாக இருக்கிறார்கள்.