உள்ளூர் இங்கிலாந்து டி20 தொடரில் தன்னுடன் இனைந்து ஆடுமாறு சக சி.எஸ்.கே வீரரை சம்மதிக்க வைத்த மொயின் அலி

0
2430
Moeen Ali T20 Blast

உலகின் நம்பர் 1 கிரிக்கெட் லீக் என்றால் அது பி.சி.சி.ஐ நடத்தும் இன்டியன் பிரிமியர் லீக் ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாடும் பலநாடுகள் இன்று ட்வென்ட்டி ட்வென்ட்டி கிரிக்கெட் தொடர்கள் நடத்துவதற்கு ஊக்கம் ஐ.பி.எல் தான்.

ஆனால் முதன் முதலில் உள்நாட்டு ட்வென்ட்டி ட்வென்ட்டி தொடரை 2003-ல் நடத்தியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட்தான். ஐ.பி.எல் துவங்கப்பட்டது 2008 ஆண்டில்தான்.

இங்கிலாந்தின் 18 கவுண்டி அணிகளைக்கொண்டு ட்வென்ட்டி பிளாஸ்ட் என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள பிராவோ, மொயீன் அலி இருவரும் உலகின் பலநாடுகள் நடத்தும் ட்வென்ட்டி ட்வென்ட்டி கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

இதில் பிராவோ உலகம் முழுவதும் ட்வென்ட்டி ட்வென்ட்டி தொடர்கள் மட்டும் அல்லாது பத்து ஓவர்கள் கொண்ட சூப்பர் டென் போட்டிகள் வரை விளையாடி வருகிறார்.

தற்போது பிராவோ இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் நடத்தும் ட்வென்ட்டி பிளாஸ்ட் தொடரில் வொர்ஸ்செஸ்டர்ஷைர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுக்குறித்து பிராவோ கூறும்பொழுது “பி.பி.எல்-ல் நான் மொயீனுடன் இருக்கும் பொழுது, அவர் ட்வென்ட்டி பிளாஸ்ட் தொடரில் நான் விளையாடுவது குறித்தான சாத்தியங்களைத் தெரிவித்திருந்தார். இது நான் விரும்பி தீவிரமாக எதிர்பார்த்திருந்த ஒன்று. இப்பொழுது எல்லாம் சேர்ந்து வருவது மகிழ்ச்சியாய் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்!

உலக கிரிக்கெட்டின் கோலாகலமான கொண்டாட்டமான வீரர்கள் வெஸ்ட்-இன்டீஸ் வீரர்கள் என்றால் அதில் அதீத கொண்டாட்டமானவர் நம் பிராவோதான். இங்கிலீஷ் மைதானங்களில் ஆரம்பிக்கட்டும் அவர் கொண்டாட்டங்கள்!