“இன்னும் பல வீரர்கள் ஓய்வு பெறப் போகிறார்கள்”- அதிர்ச்சித் தகவலை வெளியிடும் மொயின் அலி!

0
2989
Moeen ali

கிரிக்கெட் மூன்று விதமான வடிவங்களில் தற்போது விளையாடப்பட்டு வருகிறது. இதில் மூன்றாவதாக வந்தது டி20 கிரிக்கெட். டி20 கிரிக்கெட்டின் வருகை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் என்றுதான் பலர் நினைத்திருந்தனர். ஆனால் நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பது அதற்கு நேரெதிராக இருக்கிறது

டி20 கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிடும் என்று நினைத்திருக்க ஆனால் நிலைமையோ வேறு விதமாக ஒருநாள் போட்டிகளை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. காரணம் ஒரு நாள் போட்டி என்பது தற்போது டி20 கிரிக்கெட்டின் நீண்ட வடிவமாகத் தான் இருக்கிறது. பழைய ஒருநாள் போட்டிகளை போல விறுவிறுப்பாக இல்லை. விதிகள் மாற்றப்பட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் எளிமையாக ஆக்கப்பட்டு இருக்கிறது. இதனால் போட்டிகள் சுவாரசியம் அற்றுப்போகிறது!

- Advertisement -

மேலும் ஒருநாள் போட்டிகளில் வீரர்கள் அதிகப்படியான உடலுழைப்பை கொட்ட வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் டி20 போட்டிகளில் வீரர்கள் குறைந்த உழைப்பில் செலவிட்டால் போதும். மேலும் நெருக்கடியான போட்டி அட்டவணைகளால், வீரர்களால் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்க முடிவதில்லை. டெஸ்ட் போட்டிகள் எனும் போது போட்டி குள்ளேயே ஓய்வு கிடைக்கிறது. டி20 போட்டிகள் சிறிய வடிவம் என்பதால் பெரிய கடினம் இல்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளில் குறைந்த நேரத்தில் அதிக உழைப்பை செலவிட வேண்டும். இது வீரர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. இதனால் பெரும்பாலான வீரர்கள் ஒரு நாள் போட்டிகளில் ஆட விரும்புவதில்லை. இந்தக் காரணங்களால் தற்போது ஒருநாள் போட்டி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி இது தொடர்பான தனது கருத்தை மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது ” ஆம் ஒரு நாள் போட்டிகளில் நிலைமை கவலைக்கிடமாக தான் உள்ளது இதில் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பு இருந்ததுபோல வீரர்கள் இடமும் ரசிகர்களிடமும் ஆர்வமில்லை. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் ஒருநாள் போட்டிகளில் விளையாட யாரும் பெரிதாய் விரும்பமாட்டார்கள். இங்கிலாந்தின் உள்நாட்டு தொடர்களான கவுண்டி சாம்பியன்ஷிப், விட்டாலிட்டி, 100 தொடர்களுக்கு இருக்கும் ஆர்வம் ஒருநாள் போட்டிகளுக்கு இல்லை” என்று தெரிவித்தார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய மொயின் அலி ” சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவ கிரிக்கெட்டும் விளையாட வேண்டியதுதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வீரர்கள் அதிகம் சோர்வடைகிறார்கள். வீரர்கள் இதனால் ஓய்வு பெறுகிறார்கள். இதனால் இன்னும் பல வீரர்கள் ஓய்வு பெறப் போகிறார்கள். இது கவலைக்குரிய ஒரு விஷயம். தற்போது நான் கூறியிருக்கும் கருத்துக்கள் நிலையானது அல்ல. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காப்பாற்ற வேண்டுமென்றால் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஏதாவது செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருநாள் கிரிக்கெட்டை இழப்போம். நம்மிடம் டெஸ்ட் போட்டிகளும் டி20 போட்டிகளும் இருக்கின்றன. நடுவில் ஐம்பது ஓவர் போட்டிகள் இருப்பதால் அதற்கு எந்த பெரிய வரவேற்பும் இருப்பதில்லை என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் கூறுவதாக இருந்தால் உலக கிரிக்கெட்டில் தற்போது அதிக போட்டிகள் நடந்து வருகிறது என்று சொல்வேன்” என்று மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்!