மிச்சேல் ஸ்டார்க்கின் வேகத்தில் பரிதாபமாக சுருண்ட இந்தியா 117 ரன்களுக்கு ஆல் அவுட்!

0
24

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர் 17ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது.

நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. தாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டார் . இதனைத் தொடர்ந்து முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார் மிச்சல் ஸ்டார்க். ஆட்டத்தின் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் இந்திய அணியின் இன்பார்ம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மண் கில் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து ஆட வந்த விராட் கோலி ஒருபுறம் நின்று ரண்களை சேர்க்க மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. ஐந்தாவது ஓவரில் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஸ்டார்க் வேகத்தில் வெளியேற இந்தியா 32 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . கடந்த போட்டியின் ஆட்டநாயகன் கே எல் ராகுல் விராட் கோலி உடன் இணைந்து அணியை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எட்டாவது ஓவரில் அவரும் ஸ்டார்க் வந்து வீச்சில் ஒன்பது ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. ரவீந்திர ஜடேஜா மற்றும் விராட் கோலி இருவரும் ஆணியை சரிவிலிருந்து மீட்க போராடிய நிலையில் 31 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி நேத்தன்  எல்லிஸ் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார் .

அதனைத் தொடர்ந்து அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ஆயினும் ஆஸ்திரேலியா அணியின் திறமையான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. அக்சர் பட்டேல் ஒரு முனையில் நின்று போராட இந்திய அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இந்திய அணியின் பேட்டிங்கில் விராட் கோலி 31 ரன்களும் அக்சர் பட்டேல் 29 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசி 53 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷான் அபாட் மூன்று விக்கெட்டுகளையும் நேத்தன் எல்லிஸ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் . இதன் மூலம் இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .