‘அம்பானி இந்தியன்ஸ்’ என மும்பை அணியை கலாய்த்த ரசிகர், தக்க பதிலடி கொடுத்த முன்னாள் மும்பை வீரர்

0
155
Mitchell McClenaghan

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று இரவு சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி மிக காரசாரமாக நடைபெற்று முடிந்தது. முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டுப்லஸ்ஸிஸ் 50 ரன்களும், மொயின் அலி 58 ரன்களும், ராயுடு 72 ரன்களும் அடுத்தனர். இவர்கள் அதிரடியாக விளையாடிய காரணத்தால் சென்னை அணியால் 218 எடுக்க முடிந்தது.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கி மும்மை அணி ஆரம்பத்தில் அற்புதமாக விளையாடியது. துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 35 மற்றும் டீ காக் 38 ரன்களும் அடித்தனர். பின்னர் இருவரும் அவுட்டாகி செல்ல, சிறு தடுமாற்றம் ஏற்பட்டது.

- Advertisement -

அதன் பின்னர் களமிறங்கிய குருனல் பாண்டியா மற்றும் பொல்லார்டு ஜோடி மிக அற்புதமாக விளையாடியது. பாண்டியா 32 ரன்கள் அடித்தார். மறுபக்கம் பொல்லார்டு 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார். இது மும்பை அணியின் நான்காவது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளி பட்டியலில் மும்பை அணி 4வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு வரை மும்பைக்கு விளையாடிய மிட்செல் மெக்லெனகன்

மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றவுடன், தனது ட்விட்டர் பக்கத்தில் மிச்சல் மெக்லெனகன் மும்பை இந்தியன்ஸ் வெற்றியை சந்தோசத்துடன் பதிவிட்டார். இவர் மும்பை அணிக்காக 2015 முதல் கடந்த ஆண்டு வரை விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணிக்காக பல போட்டிகளில் முக்கியமான போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு சிறப்பாக பங்களித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது ஃபார்ம் சரியாக இல்லாத காரணத்தினால், உண்மையின் இவரை இந்த ஆண்டு அணியில் இருந்து தூக்கி விட்டது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இடத்தில் கூட இவரை திரும்ப வாங்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மும்பை அணிக்காக தனது ஆதரவை சமூக வலைதளங்களில் மிட்செல் மெக்லெனகன் எப்பொழுதும் பதிவிட்டு வருவார்.

- Advertisement -

மெக்லெனகனை சீண்டிப் பார்த்த ரசிகர்

நேற்றும் அவ்வாறு மும்பை அணியின் வெற்றியை டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டார். அதன் கீழ் ரசிகர் ஒருவர் மும்பை இந்தியன்ஸ் என்று சொல்லாமல் அம்பானி இந்தியனஸ் கமெண்ட் செய்திருந்தார். அதனை கண்ட மிட்செல் நிதானம் இழந்து அவரது பதிவுக்கு எதிர்பதிவு செய்தார்.

ஆமாம் உண்மை இந்தியன்ஸ் அணியை அம்பானி தான் சொந்தம் கொண்டாடி வருகிறார். அது அவருடைய அணி தானே என்று நக்கல் தொனியில் எதிர் கேள்வி கேட்டுள்ளார். மிட்ச்செல் கேட்ட கேள்விக்கு அந்த ரசிகர் எந்த பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.