காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறியுள்ள மிட்செல் மார்ஷ் ; ஐபிஎலில் சந்தேகம்

0
61
Mitchell Marsh

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் நடைபெற இருக்கின்றது. அதன் பின்னர் ஒரு டி20 போட்டியும் இந்த இரு அணிகளுக்கிடையே இருக்கின்றது.

ஒருநாள் தொடர் நடைபெறுவதற்கு முன்பாக அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் வீரர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தற்போது தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை பெற்றவர் மிட்செல் மார்ஷ்.

- Advertisement -
தொடரில் இருந்து வெளியேறியுள்ள மிட்செல் மார்ஷ்

சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் ரிசர்வ் வீரராக அவர் ஆஸ்திரேலிய அணியுடன் இணைக்கப்பட்டிருந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் நிச்சயமாக அவர் ஆஸ்திரேலிய அணியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான தயாராகி வந்த அவர் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்றும் அவர் தற்பொழுது தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாற்று வீரராக களமிறங்கும் கேமரூன் கிரீன்

ஆஸ்திரேலிய அணிக்கு கடந்த ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் கேமரூன் கிரீன். அதுமட்டுமன்றி சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

- Advertisement -

ஒருநாள் தொடரை பொறுத்த வரையில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி அவர் தற்பொழுது மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக களமிறங்க போகிறார். கேமரூன் கிரீன் பற்றி பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்குவார் என்றும் அதேசமயம் பந்துவீச்சில் அணிக்கு உதவி புரிவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடருக்கு தயாராக வேண்டும்

மேலும் பேசிய அவர் அடுத்த ஆண்டு இந்தியாவில் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே அதற்கும் நாங்கள் தயாராக வேண்டும். உலகக் கோப்பை தொடருக்கு ஏற்ற அணியை தற்போதே தயார் செய்ய வேண்டும். அனைத்தும் சரியான திட்டமிடலுடன் நடக்கும் என்றும் ஆரோன் பின்ச் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை ஆஸ்திரேலிய அணி நான்கு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அந்த அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதன் பின்னர் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.