என்னைப் பல ஆஸ்திரேலிய ரசிகர்கள் வெறுக்கின்றனர் ; நிச்சயம் ஒருநாள் நான் வெற்றியை தேடித் தருவேன் – சொன்ன வாக்கை காப்பாற்றிய மிட்செல் மார்ஷ்

0
213
Mitchell Marsh

2021 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை டி20 தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். 173 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 5 ரன்களில் ஆட்டமிழக்க முதலில் ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறியது. பின்னர் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் மிக அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். டேவிட் வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மறுபக்கம் மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 77 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சொன்ன வாக்கை நிறைவேற்றி காட்டிய மிட்செல் மார்ஷ்

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் வீரர் மிட்செல் மார்ஷ் ஒரு பேட்டியில், ஆஸ்திரேலியர் ஆசிரியர்கள் அனைவரும் தன்மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாக கூறினார். நான் ஆஸ்திரேலிய அணிக்காக அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்புகளை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நிறைய வாய்ப்புகளை நான் வீண் விரயம் செய்து விட்டேன்.

ஆஸ்திரேலியா ரசிகர்கள் என் மீது காட்டும் கோபம் மிகவும் நியாயமானது தான். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு ரசிகர்கள் மனதில் இருப்பது மிகவும் இயல்பானது தான். ஆனால் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளாத எண்ணி நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் நிச்சயமாக ஆஸ்திரேலிய ரசிகர்களுக்காக நான் ஒருநாள் வெற்றியை தேடித் தந்து அவர்களை சந்தோஷம் அடையச் செய்வேன் என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

- Advertisement -

இரண்டு வருடங்களுக்கு முன் அவர் கூறிய வார்த்தை நேற்று அவர் நிறைவேற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் ஐந்து முறை பட்டம் பெற்று இருந்தாலும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. அதை மாற்றி அமைக்கும் வண்ணம் நேற்று மிட்செல் மார்ஷ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலமாக ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தார். 14 வருட தேடலுக்கு கிடைத்த பரிசாக நேற்று ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி கோப்பையை ருசி பார்த்தது.

கடந்த நாட்களில் எந்த ரசிகர்கள் மிட்செல் மார்ஷை திட்டி தீர்த்தார்களோ அதே ரசிகர்கள் இன்று அவரை சமூக வலைத்தளங்களில் பாராட்டு தள்ளுகின்றனர். ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிட்செல் மார்ஷுக்கு வாழ்த்து தெரிவித்த வந்த வண்ணம் இருக்கின்றனர்.