கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை, 20 ரன்கள் அடித்த சஞ்சு; ரெண்டு ஷாட்ல மிஸ் ஆகிடுச்சு! – கடைசிவரை போராடிய சஞ்சு சாம்சன் பேட்டி!

0
896

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச் சென்ற சஞ்சு சாம்சன் பேட்டியளித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் துவக்கத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவராக மாற்றப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 40 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் அடித்திருந்தது. மலான்(22) மற்றும் டி காக்(48) இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர்.

மிடில் ஆர்டரில் கேப்டன் பௌவுமா(8) மற்றும் மார்க்ரம்(0) இருவரும் சொற்ப ரன்களுக்கும், ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளாஸன்(74) மற்றும் மில்லர்(75) இருவரும் அதிரடியாக விளையாடி தென்னாபிரிக்கா அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் படும் மோசமாக அமைந்தது கேப்டன் தவான்(4) மற்றும் கில்(3) இருவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ருத்ராஜ்(19) மற்றும் இஷான் கிஷன்(20) இருவரும் நீண்ட நேரம் களத்தில் இருந்தனர். ஆனால் அதிக பந்துகளில் குறைந்த ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு இலக்கை எட்ட கூடுதல் சிக்கலானது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஷ்ரேயாஸ்(50) அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த தாக்கூர் சிறிது நேரம் நிலைத்து ஆடி சாம்சனுடன் பாட்னர்ஷிப் அமைத்தார். இவரும் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணிக்கு இலக்கு கடினமானது.

கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது சாம்சன் 20 ரன்கள் அடித்தார். இறுதியில் இந்திய அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த சஞ்சு சாம்சன் கூறுகையில், ” ஓரு கட்டத்தில் இலக்கு அதிகமாக இருந்தது. ஆனால விக்கெட்டுகள் இல்லை. இவ்வளவு நெருக்கமாக செல்வோம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடைசி வரை போராடிய விதம் நம்பிக்கை அளிக்கிறது. எனது தனிப்பட்ட பேட்டிங் கூடுதல் பலத்தை எனக்கு தருகிறது. கடைசி ஓவரில் இலக்கை எட்ட முடியும் என்று அதீத நம்பிக்கை கொண்டிருந்தேன். துரதிஷ்டவசமாக இரண்டு ஷார்ட்கள் மிஸ் ஆனது. அடுத்த போட்டி இன்னும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நிச்சயம் இந்திய அணி மீண்டு வரும்.” என்றார்.