கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக இதைச் செய்தும் மண்ணைக் கவ்விய இந்தியா ; மில்லர் – வாண்டர் டுசன் அதிரடியில் தென் ஆப்ரிக்கா புதிய சாதனை

0
203
Ind vs Sa 1st T20I

ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இன்று இந்தத் தொடரின் முதல் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது!

இந்த ஆட்டத்திற்கான டாஸில் ஜெயித்ளு செளத் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணி தரப்பில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் இடம் பெற்றனர். செளத் ஆப்பிரிக்க அணி தரப்பில் எய்டன் மார்க்ரம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், புதுமுக வீரர் ஸ்ட்ரிஸ்டன் டப்ஸ் அறிமுகுமானார்.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் ருதுராஜ் ஜோடி முதல் விக்கெட்டுக் 57 ரன்களை சேர்த்தது. அடுத்து இணைந்த இஷான் கிஷன் ஸ்ரேயாஷ் இந்த ஜோடி 80 ரன்கள் சேர்த்திருக்க, இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்களைகளையும், ஸ்ரேயாஷ் 27 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள்.

இறுதிக்கட்டத்தில் கேப்டன் ரிஷாப் பண்ட் 16 பந்துகளில் 29 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 12 பந்துகளில் 31 ரன்களையும் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் இந்திய அணி 211 ரன்களை குவித்தது. வேய்ன் பர்னால் நான்கு ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

அடுத்து 212 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிர்க்க அணிக்குத் துவக்கம் தர வந்த கேப்டன் பவுமா, அவருக்கு அடுத்து வந்த டிவைன் பிரட்டோரியஸ் இருவரையும் புவனேஷ்வர் குமார் ஹர்சல் படேல் வழியனுப்பி வைத்தனர். அடுத்து மற்றொரு துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டிகாக்கும் 22 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

ஆனால் அதற்கடுத்து வந்த டேவிட் மில்லர் வான்டர் டெசனுடன் இணைந்து இந்திய அணியின் வெற்றிக்கனவை கலைத்தார். இந்த ஜோடி இறுதி வரை நின்று 131 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிபெற வைத்தனர். டேவிட் மில்லர் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களோடு 31 பந்தில் 64 ரன்களும், வான்டர் டெசன் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களோடு 46 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

இந்தப் போட்டியில் செளத் ஆப்பிரிக்கா சேஸ் செய்த 211 ரன்களே இந்தியாவிற்கு எதிராக அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட ரன் ஆகும். இந்தியா முதல் முறையாக 200+ ரன்கள் அடித்து தோற்றிருக்கிறது. கடைசியாக 11 முறை 200+ ரன்களில் டிபென்ட் செய்ய முடியாமல் தோற்றது இதுவே முதல் முறை. கடைசியாக செளத் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி, ஒரு டி20 என ஆறு போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணி தோற்றிருக்கிறது!