ஆட்டத்திற்கு நடுவில் 2 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் & போல்லார்ட்க்கு இடையே நடந்த சுவாரஸ்யமான உரையாடல்

0
971
Suryakumar Yadav and Kieron Pollard

இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடர் ஆக இது நடைபெற்று வருகிறது. விராட் கோலி ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு பதிலாக ரோகித் முதன்முறையாக கேப்டனாக இந்த தொடரில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்திய அணி முதல் போட்டியில் விளையாடி முடித்தவுடன் அது இந்திய அணி ஆயிரம் போட்டிகளில் விளையாடி விட்டது என்ற வரலாற்று சாதனையை பதிவு செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மிகப் பிரம்மாண்டமான வெற்றியுடன் இந்திய அணி இந்த தொடரை தொடங்கியுள்ளது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி சிறப்பாக பந்துவீசி மேற்கிந்திய தீவுகள் அணியை 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சிறப்பான துவக்கம் கொடுத்தார். அதிரடியாக ஆடி 60 ரன்கள் எடுத்த இந்திய அணி இலக்கை நோக்கி மிகவும் வேகமாக முன்னேறியது. அதன் பிறகு வேகமாக விக்கெட்டுகள் விழுந்தாலும் 5-வது விக்கெட்டுக்கு சூரியகுமார் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை இந்த ஜோடி வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

- Advertisement -

இதற்கு இடையில் இந்திய அணியின் சூரியகுமார் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் பொல்லார்டு ஆகியோருக்கு இடையில் சுவாரஸ்யமான உரையாடல் ஒன்று நடந்துள்ளது. சூரியகுமார் பேட்டிங் பிடித்துக் கொண்டிருக்கும் போது, மிட் விக்கெட் திசையில் யாரும் இல்லை என்றும் அதனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது போல அந்தப்பக்கம் ரன் அடிக்கலாமே என்று பொல்லார்டு கூறியுள்ளார். அதற்கு சூரியகுமார் இது ஐபிஎல் போட்டி இல்லை என்று உடனடியாக பதில் அளித்துள்ளார். இந்த இரண்டு பேருமே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பனிப்பொழிவு இரண்டாவது இன்னிங்சில் இருப்பதால் பேட்டிங் வீரர்களுக்கு அது மிகவும் கடினமாக இருக்காது என்றும் ஆட்டம் போகப்போக பந்துவீச்சாளர்களுக்கு தான் கடினமாக இருக்கும் என்றும் அவர் பேசினார். அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் இருப்பதால் தற்போதே அதற்காக அணியை கட்டமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.