சிஎஸ்கே வின் அடுத்த கேப்டன் யார்? மைக்கேல் ஹஸி சொன்ன தகவல்

0
3078

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக வர யாருக்கு அதிக தகுதி இருக்கிறது என்பது குறித்து அந்த அணியின் முன்னாள் தொடக்க வீரர் மைக்கேல் ஹஸி தெரிவித்துள்ளார்.  நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
ஆனால் ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர்ந்து தோல்வியை தழுவியதை அடுத்து, அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து தோனி மீண்டும் கேப்டனாக பதவி ஏற்றார். ஆனால் தற்போது தோனிக்கு வயது 42 -ஐ நெருங்குகிறது.

- Advertisement -

இதன் காரணமாக தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி கொடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை. இதனை அடுத்து அடுத்த கேப்டனாக யார் வருவார் என்பது குறித்து மைக்கேல் ஹஸி கூறியிருக்கிறார். சிஎஸ்கே அடுத்த கேப்டன் குறித்து என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் திட்டத்தில் யார் உள்ளார்கள் என்று குறித்தும் என்னால் கணிக்க முடியவில்லை.

ஆனால் என்னை பொறுத்தவரை ருத்துராஜ்  கெய்க்வாட் தோனியை போல களத்தில் அமைதியாக இருக்கிறார். நெருக்கடியான சூழலை தோனி போல சுலபமாக கையாள்கிறார். கிரிக்கெட் போட்டியில் என்ன நடக்கிறது என்பதை நுணுக்கமாக கவனிக்கிறார். ருத்துராஜ்  அணியில் இருப்பதை மற்ற வீரர்களும் விரும்புகிறார்கள். இது எல்லாம் ஒரு தலைவனாக இருப்பதற்கு நல்ல அழகு. களத்தில் நடந்து கொள்ளும் விதம், பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்.

- Advertisement -

இதனால் ருத்துராஜ் அடுத்த சிஎஸ்கே கேப்டன் ஆக அனைத்து தகுதியும் இருக்கிறது என்று நான் கருதுகிறேன் என்று மைக்கேல் ஹசி கூறி உள்ளார். விஜய் ஹசாரே கோப்பையில் ருத்துராஜ் தலைமையிலான மகாராஷ்டிர அணி இறுதிப்போட்டி வரை வந்துள்ளது. இது ருத்துராஜ் காலிறுதியில் 220 ரன்களும் , அரையிறுதியில் 168 ரன்களும் அடித்து அசத்தியிருக்கிறார். இந்தத் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட், பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் மாற்றுவது, ஃபில்டர்களை நிறுத்துவது என சிறப்பாக கேப்டன்சி   பதவியை செய்திருக்கிறார். இந்தத் தொடரின் போது தமக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை இளம் வீரர் ராஜவர்த்தனே ஹங்கர்கேக்கருக்கு ருத்துராஜ் வழங்கியதும் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.