ஆர்சிபி அணியில் முக்கிய வீரர் விலகல்.. இந்தியாவுக்கு எதிராக அதிரடி சதமடித்த வீரரை மாற்று வீரராக சேர்ப்பு!

0
173

காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகிய வில் ஜாக்ஸ்-க்கு பதிலாக மைக்கல் பிரேஸ்வெல்லை மாற்று வீரராக எடுத்து இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கடந்த ஐபிஎல் ஏலத்தில் 3.2 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார் இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜாக்ஸ். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் இங்கிலாந்து அணிக்கு நல்ல பங்களிப்பை கொடுத்து வரும் இவரின் இது எதிர்பார்ப்பு நிலவியது.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு முன்பாக, மார்ச் மாதம் துவக்கத்தில் வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பெற்று விளையாடி வந்த வில் ஜாக்ஸ், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஃபீல்டிங் செய்து வந்தபோது காயம் அடைந்தார்.

அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலின் தசை பகுதியில் படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது இவர் குணம் அடைவதற்கு குறைந்தபட்சம் 4 5 வாரங்கள் ஆகலாம் என்று தெரிவித்தனர் இதன் அடிப்படையில் வங்கதேச அணியுடன் நடந்த டி20 தொடர் மற்றும் அடுத்து வரவிருக்கும் ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளில் வில் ஜாக்ஸ் விளையாட மாட்டார் என்று தெரியவந்தது

அதன்பின் ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாக விலகுவதாகவும் ஜாக்ஸ் தெரிவித்தார். இதனால் விரைவாக அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்யும் பணியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் இறங்கியது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மைக்கேல் ப்ரேஸ்வெல் மீது ஆர்சிபி அணி நிர்வாகம் கண் வைத்தது. ஏனெனில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்திருந்தபோது ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 78 பந்துகளில் 140 ரன்கள் விலாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பந்துவீச்சிலும் நல்ல நம்பிக்கையை கொடுத்தார்.

அதன் பிறகு நடைபெற்ற தொடர்களிலும் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவரை எடுக்க ஆர்சிபி அணி நிர்வாகம் முனைப்பு காட்டியது. இரு தரப்பிற்குமிடையே நிலவிய பேச்சுவார்த்தைக்கு பிறகு மைக்கேல் பிரேஸ்வெல் ஆர்சிபி அணியில் இணைவதாக ஒப்புக்கொண்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆர்சிபி அணி நிர்வாகம் இன்று வெளியிட்டது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஆரம்ப விலையான ஒரு கோடி ரூபாய்க்கு மைக்கேல் ப்ரேஸ்வெல் கலந்து கொண்டார். அப்போது இவரை எந்த அணியும் எடுக்க முன் வரவில்லை. அதன் பிறகு இந்திய மைதானங்களில் இவரின் செயல்பாடுகள் நன்றாக இருந்தது அடுத்து ஆர்சிபி அணி நிர்வாகம் இவரை எடுத்திருக்கிறது.