இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு குறிப்பிட்ட ஆஸ்திரேலியா வீரரின் பந்துவீச்சை பார்த்தாலே பயப்படுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் மோசமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கேஎல்.ராகுல் மற்றும் ஜடேஜா இருவர் மட்டுமே போராடி அரசாங்கம் அடித்திருக்கிறார்கள்.
நேற்று இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் நான்காவது நாளில் களம் இறங்கிய இந்திய அணிக்கு 27 பந்தில் 10 ரன்கள் மட்டும் எடுத்து மீண்டும் பேட் கம்மின்ஸ் வந்து வீட்டில் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார். குறைந்தது 30, 40 ரன்கள் ஆவது எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் ஏமாற்றம் தந்தார்.
மேலும் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டம் இழப்பது தொடர்கதை ஆகிய வருகிறது. இத்தோடு அவர் கேப்டன் பொறுப்பில் மட்டும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களே பலரும் பேசும் அளவுக்கு நிலைமை மோசமாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும்பொழுது “பேட் கம்மின்ஸ் போட்டியில் அங்கேயே இருந்தார். ஆனால் அவரது பந்துவீச்சு கேள்விகளுக்கு ரோகித் சர்மாவிடம் எந்தவித பதிலும் இல்லை. அவர் மிகவும் பயந்தவராக காணப்பட்டார். மேலும் அவர் கம்மின்ஸ் இடம் வித்தியாசமான பந்துவீச்சை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு வேறு விதமான ஒன்று கிடைத்தது. அவர் ஆட்டம் இழந்து வெளியேறிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 423 ரன்.. நியூசி சாதனை வெற்றி.. சவுதி ஃபேர்வெல் டெஸ்ட்.. இங்கிலாந்து அணி படுதோல்வி
மேலும் இதுகுறித்து பேசி உள்ள ஹர்ஷா போக்லே கூறும் பொழுது ” இந்தியா தங்கள் கேப்டனிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது. அடுத்து நாம் மெல்போர்னுக்கு செல்லும் பொழுது தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்க 200 ரன்கள் தேவைப்பட்டது. இந்த 200 ரன்னில் 40 சதவீதத்தை கேப்டன் ரோகித் சர்மா எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர் மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் தந்து வெளியேறிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.