அமெரிக்காவில் கிரிக்கெட்டை விற்க இப்படி பண்ணலாமா?.. இந்தியா பாக் போட்டி என்ன ஆகுமோ.. மைக்கேல் வாகன் விமர்சனம்

0
321
Vaughan

நேற்று டி20 உலக கோப்பை தொடரில் நியூயார்க் நாசாவ் மைதானத்தில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஐசிசி குறித்து மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

கிரிக்கெட்டை உலகம் எங்கும் கொண்டு செல்வதற்காக ஐசிசி நிறைய முயற்சிகள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் கிரிக்கெட்டை நுழைத்திருக்கிறது. அமெரிக்கா ஒரு படி மேலே சென்று ஆரம்ப நிலையில் ஐபிஎல் போல ஒரு டி20 லீக்கை ஆரம்பித்து முதல் வருடத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரை வெஸ்ட் இண்டிஸ் நாட்டுடன் சேர்ந்து அமெரிக்காவுக்கும் நடத்துவதற்கு ஐசிசி வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இதற்காக அமெரிக்கா நியூயார்க் நகரில் வெறும் ஒரு வருடத்திற்குள் ஒரு பெரிய மைதானத்தைக் காட்டி திறந்து போட்டியை நடத்தி விட்டது.

தற்போது நியூயார்க் நகரில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் நாசாவ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சரியான முறையில் இல்லை. பந்து சீரற்ற பவுன்ஸ் கொண்டதாக ஆடுகளத்தில் இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு அடிபடுகிறது. மேலும் அவுட்ஃபீல்டு மிகவும் மென்மையாக இருப்பதால் வீரர்கள் டைவ் செய்தால் காயம் அடைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இதன் காரணமாக இங்கு நடத்தப்பட்ட முதல் சர்வதேச போட்டியில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 77 ரன்களில் சுருண்டது. நேற்று இங்கிலாந்து அயர்லாந்து அணிகள் விளையாடிய போட்டியில் அயர்லாந்து 96 ரன்னில் சுருண்டது. தற்போது டி20 உலக கோப்பை தொடர் ரசிகர்களுக்கு மிகவும் சலிப்பை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களும் மிகவும் மெதுவாக காணப்படுகிறது. மேலும் இதே நியூயார்க் மைதானத்தில்தான் இந்தியா பாகிஸ்தான் அணி மோதிக் கொள்ளும் போட்டியும் நடக்க இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 14 பேர் ஒற்றை இலக்கம்.. வெறும் 77 ரன்.. உகாண்டா வரலாற்று வெற்றி.. டி20 உலக கோப்பையில் சுவாரசியம்

தற்போது இது குறித்து பேசி இருக்கும் மைக்கேல் வாகன் “ஐசிசி அமெரிக்காவில் கிரிக்கெட்டை விற்பது நல்ல விஷயம். நான் இதை விரும்புகிறேன். ஆனால் நியூயார்க் மைதானத்தில் இருக்கும் மோசமான ஆடுகளத்தில் வீரர்கள் விளையாட வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உலகக் கோப்பைக்கு வருவதற்கு ஒவ்வொரு நாடுகளும் கடுமையாக உழைத்து வருகின்றன. அப்படி வந்த பின் இப்படி மோசமான ஆடுகளத்தில் விளையாட வேண்டி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.