மெல்போர்ன் எனது சொந்த மைதானம் ; உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் எச்சரிக்கை!

0
1193
Ind vs Pak

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, அந்த உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இருந்து இந்திய அணி வெளியேறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தமுறை அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் மீண்டும் பாகிஸ்தான் அணியோடு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் இருபத்தி மூன்றாம் தேதி இந்திய அணி மோத இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் இரண்டுமுறை மோதிக்கொண்டன. இந்த இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணி தனது நட்சத்திர முக்கிய பந்துவீச்சாளர்களை இழந்து இருந்தது. இந்த காரணத்தால் இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலைமை உருவானது. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்திய அணியின் செயல்பாடு பாகிஸ்தான் அணியை விட சிறந்ததாகவே தெரிந்தது.

தற்பொழுது ஏழு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் உள்நாட்டில் இங்கிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் அபாரமாய் இங்கிலாந்து அணி வென்ற போதும், திரும்பி வந்த பாகிஸ்தான் அணி அடுத்த மூன்று ஆட்டங்களை வென்று தற்போது தொடரில் முன்னணியில் உள்ளது. இதற்கு அடுத்து இருக்கும் இரண்டு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தை வென்றாலும் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் வெற்றியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் உடைய பங்களிப்பு நல்ல வகையில் உள்ளது. இவர் 5 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை இந்த தொடரில் வீழ்த்தி இருக்கிறார். தற்போது இவர் டி20 உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியை எதிர்த்து விளையாடும் ஆட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி ஹாரிஸ் ரவுப் கூறும்பொழுது ” இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள் எப்பொழுதும் உயரழுத்த போட்டிகள். யாராக இருந்தாலும் போட்டிகள் அப்படித்தான் இருக்கிறது பெரும்பாலும். கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியுடன் மோதிய போட்டியில் நான் அழுத்தமாக உணர்ந்தேன். ஆனால் ஆசிய கோப்பையில் கடந்த இரண்டு போட்டிகளில் நான் அப்படி உணரவில்லை. ஏனென்றால் நான் என்னுடைய சிறந்ததை செய்யவேண்டும் என்று தெரியும் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் என்னுடைய சிறந்ததை கொடுத்தால் அவர்களால் என்னை விளையாட முடியாது. டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவுடன் மெல்போர்ன் மைதானத்தில் இருப்பதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் ஆஸ்திரேலிய பிக் பாஸ் தொடரில் மெல்போர்ன் அணிக்காக விளையாடி வருகிறேன். அந்த மைதானம் எனது சொந்த மைதானம் ஆகும். எனக்கு அந்த மைதானத்தில் நிலைமைகள் எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். இந்தியாவுக்கு எதிராக அங்கு நான் எப்படி பந்து வீச வேண்டும் என்று இப்போதே திட்டமிட ஆரம்பித்து விட்டேன்” என்று கூறியிருக்கிறார்!