டெஸ்ட் கிரிக்கெட்டில் “கிங் பேர்” என்றால் என்ன தெரியுமா?

0
264
Sam Curran Test

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நேற்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிறந்த வெற்றிகளுள் ஒன்றாகும்.இந்திய அணியின் பந்து வீச்சாளரான சிராஜ், பும்ரா, இஷாந்த், ஷமி என அனைவரும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை பெற்று தந்தனர். அதிலும் குறிப்பாக முகமது சிராஜ் கடைசியாக விழுந்த இங்கிலாந்தின் 5 விக்கெட்டுகள் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பலரும் எதிர்பாராத நேரத்தில் கிடைத்த இந்த வெற்றியை நேற்று இரவில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கிங் பேர்

நேற்றைய ஆட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் குர்ரன் கிங் பேர் வாங்கி அவுட் ஆனது தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது மிகவும் அரிதாக நடக்கும் விஷயம். ஆனால் பலர் இந்த பதத்தை இப்போதுதான் முதல்முறையாக கேள்வி படுகிறார்கள். அதனால் கிங் பேர் என்றால் என்ன என்பதை பார்ப்பதற்கு முன்பு பேர்(pair) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேர் என்றால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து எந்த ஒரு ரன் அடிக்காமல் வெளியேறி விட்டார் என்பது பொருள். அதாவது இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு வீரர் டக் அவுட் ஆனால் இவ்வாறு குறிப்பிடுவர். இதையே ஒரு வீரர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முதல் பந்திலேயே அவுட் ஆனால் அது கிங் பேர் என்று அழைக்கப்படும். நேற்று இரண்டு இன்னிங்ஸ்களிலும் சாம் குர்ரன் அவ்வாறு தான் அவுட்டானார். முதல் இன்னிங்சில் இசாந்த் இடமும் இரண்டாவது இன்னிங்சில் சிராஜ் இடமும் ஆட்டமிழந்தார் சாம் குர்ரன்.

ஏற்கனவே பலர் இந்த முறையில் ஆட்டமிழந்து உள்ளனர். நேற்றைய ஆட்டத்தில் ஆடிய ஆண்டர்சன் கூட ஒருமுறை இப்படி அவுட்டாகி உள்ளார். இந்திய அணியில் விரேந்திர சேவாக் அகார்கர் போன்றோர் கிங் பேர் வாங்கி உள்ளனர். மொத்தத்தில் நேற்றைய ஆட்டத்தில் நடந்த கிங் பேர் சம்பவம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 22-வது முறையாக நடந்ததாகும்.