5 விக்கெட் போனபிறகு, நான் இறங்கினப்போ, சூர்யா பாய் எங்கிக்கிட்ட இதை மட்டும் தான் சொன்னாரு.. அதுக்கு அப்புறம் அடிக்க ஆரம்பித்தேன் – ஹீரோ அக்ஸர் பட்டேல் பேட்டி!

0
6346

5 விக்கெட் இழந்தபிறகு, நான் உள்ளே வந்தபோது, சூர்யா என்னிடம் இதைமட்டும் செய்வோம் என்று சொன்னார் என பகிர்ந்துள்ளார் அக்ஸர் பட்டேல்.

புனே மைதானத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டி20 போட்டியில் இலங்கையிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 207 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு 57 ரன்களில் 5 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது.

- Advertisement -

அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த அக்ஸர் பட்டேல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் ஆறாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். மிகப்பெரிய தோல்வியை இந்திய அணி சந்திக்கப்போகிறது என பலரும் எதிர்பார்த்த போது, அக்சர் பட்டேல் அபாரமாக விளையாடி 31 பந்துகளில் 65 ரன்கள் விலாசினார். அதில் மூன்று பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் அடங்கும்.

மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்த சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் எட்டுவதே கடினம் என இருந்த நிலையில், 190 ரன்கள் வரை சென்றதற்கு அக்ஸர் பட்டேல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவர் மட்டுமே காரணம்.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த அக்ஸர் பட்டேல், எனக்கும் சூர்யாவுக்கும் இடையே என்ன பேச்சு வார்த்தை நடந்தது? என்பதை பற்றி பேசியுள்ளார். அக்ஸர் கூறியதாவது

- Advertisement -

“நான் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது சூரியகுமார் யாதவிடம் பேசினேன். அப்போது அவர் என்னிடம், அதிரடியான விளையாட துவங்குவோம். வெல்லவேண்டும் என்கிற முனைப்பிலேயே இருப்போம். 10 முதல் 12 ரன்கள் ஒரு ஓவருக்கு அடிக்க வேண்டும் என்று முயற்சிப்போம். அப்போது ஓரிரு ஓவர்கள் இன்னும் அதிக ரன்கள் நமக்கு கிடைக்கும். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இலக்கை எட்ட முயற்சிப்போம்.’ என்றார். அதுதான் எங்களது அணுகுமுறையாக இருந்தது.” என பகிர்ந்தார்.

ஹாட்ரிக் சிக்ஸ் பற்றி பேசிய அக்ஸர் பட்டேல் கூறுகையில், “14வது ஓவரில் ஹசரங்காவை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு நாங்கள் அடிக்கவில்லை. பந்து வந்த திசையை நோக்கி பேட்டை சுழற்ற முயற்சித்தேன். அது சாதகமாக அமைந்துவிட்டது. கிட்டத்தட்ட 15 ஓவர்கள் கடந்து விட்டது. இனி பினிஷிங் ரோல் விளையாட வேண்டும் அதைத்தான் நானும் செய்தேன்.” எனவும் பேசினார்.