“இதுல கில்லாடி சச்சினும் விராட் கோலியும்தான்!” – டேவிட் வார்னர் ஓபன் டாக்!

0
1832
Warner

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் ஒரு அதிசயமான பெயர் டேவிட் வார்னர். ஏனென்றால் ஆஸ்திரேலியா உள்நாட்டுப் போட்டியில் சிவப்பு பந்தில் விளையாடாமல் நேரடியாக ஆஸ்திரேலியா வெள்ளை பந்து அணிக்கு வந்ததோடு, அங்கிருந்து சிவப்பு பந்து அணிக்கும் சென்ற ஒரே பேட்ஸ்மேன் டேவிட் வார்னர்!

டேவிட் வார்னர் ஒரு அணிக்கான சரியான வீரர் என்பதை தாண்டி ஒரு கேப்டன் என்ன சொன்னாலும் அதை தட்டாமல் அப்படியே செய்கின்ற ஒரு தளபதி. இந்த காரணத்தால்தான் பால் டெம்ப்பரிங் விசயத்தில் ஸ்டீவன் ஸ்மித் உடன் இவரும் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியில் ஆரம்பத்தில் இவரது அணுகுமுறை மிக மிக ஆக்ரோஷமானது. களத்தில் இவர் மோதாத வீரர்களே கிடையாது. எல்லா வீரர்களையும் களத்தில் வம்புக்கு இழுப்பது இவரது வாடிக்கை.

இதையெல்லாம் தாண்டி களத்திற்கு வெளியேவும் இவர் இப்படித்தான் இருந்தார். இரவு ஹோட்டலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்டின் முகத்தில் இவர் தாக்கியது என இவரது மறுபக்கத்தை சொல்ல நிறைய இருக்கிறது!

ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விரிவடைந்து இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற, பல வீரர்கள் கலந்து பழகும் வாய்ப்பு கிடைக்க, அதன் பலனாக வீரர்களுக்குள் இருந்து வந்த சின்ன சின்ன பகை உணர்வுகள் மறைய ஆரம்பித்தன.

- Advertisement -

இந்த காரணத்தோடு சேர்த்து டேவிட் வார்னருக்கு கொஞ்சம் வயதுமாக அவர் பக்குவப்பட ஆரம்பித்தார். பால் டேம்பரிங் தண்டனைக்கு பிறகு திரும்பி வந்த அவரது ஆக்ரோச அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் இருந்தது.

இதற்கு அடுத்து அவரது களத்திற்கு உள்ளேவும் வெளியேவும் ஆன செயல்பாடு மிகவும் முதிர்ச்சி அடைய ஆரம்பித்து இருந்தது. இப்படியான ஒரு வீரர் தற்பொழுது தனது நூறாவது டெஸ்டில் விளையாடி வருவது தனிச்சிறப்பான விஷயம். இந்தத் தனிச்சிறப்பான விஷயத்தில் அவர் இரட்டை சதம் அடித்திருப்பது அதைவிட தனிச்சிறப்பான விஷயம்.

இந்த மகிழ்ச்சியோடு சேர்த்து டேவிட் வார்னர் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். கிரிக்கெட் உலகில் முடி சூடா மன்னர்களாக விளங்கிய சில வீரர்களை குறிப்பிட்டு அவர்களுடைய ஷாட்களை பற்றி அவர்களுடைய ஆட்டத்தைப் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார்.

இதுவெல்லாம் குறித்து பேசிய அவர்
” எனக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் மிகவும் பிடித்த வீரர். அவருடைய பேக் புட் கவர் ட்ரைவ் அபாரமானது. இவரைப் போலவே ஸ்டீவ் வாக்கின் பேக்புட் கவர் டிரைவும் இருக்கும். ஸ்ட்ரெயிட் டிரைவ் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். அவர் இதிலும் நார்மலான கவர் டிரைவிலும் மிகப்பெரிய வல்லவர். கொஞ்சம் பரபரப்பான சூடு பிடித்த ஆட்டங்கள் என்றால், 360 டிகிரியில் விளையாடும் ஏபி டிவில்லியர்ஸின் ஆட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தது. இவரது ஆட்டத்தைப் போலவே விராட் கோலியின் ஆட்டமும் எனக்கு இப்படியான நேரத்தில் மிகவும் பிடித்தது” என்று கூறியிருக்கிறார்!