கிரிக்கெட்

200 கிளப்புக்கு நானும் இஷான் கிஷனும் உன்னை வரவேற்கிறோம் – ரோகித் சர்மா பேட்டி!

200 ரன்கள் கிளப்பிற்கு உன்னை வரவேற்கிறோம் என போட்டி முடிந்த பின் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சுப்மன் கில்லுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்த சுப்மன் கில், சர்வதேச அரங்கில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இவருக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், ரோகித் சர்மா மற்றும் சமீபத்தில் இஷான் கிஷன் ஆகியோர் இரட்டை சதம் அடித்திருக்கின்றனர்.

மிகவும் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்கிற பெருமையையும் சுப்மன் கில் பெற்றார். இந்த ஆட்டத்தின் மூலம் அதிவேக ஆயிரம் ரன்கள், முதல் 19 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என பல சாதனைகளையும் படைத்திருக்கிறார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு, இரட்டை சதம் அடித்து தற்போது இந்திய அணியில் இருந்து வரும் இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சுப்மன் கில்லுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். அப்போது, “இரட்டை சதம் அடித்த வீரர்களின் கிளப்பிற்கு உன்னை அன்புடன் வரவேற்கிறோம்.” என கைகுலுக்கி வரவேற்றனர்.

- Advertisement -

அதன் பிறகு சுப்மன் கில்லிடம் சில கேள்விகளை எழுப்பினார் இஷான் கிஷன். அதில் போட்டிகளில் களமிறங்குவதற்கு முன்னர் உன்னுடைய அன்றாட பழக்கவழக்கம் என்னவாக இருக்கும்? என்றார். அவருக்கு பதில் அளித்த சுப்மன் கில், “நான் என்னை எப்போதும் அமைதியாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக எனது ஐபெடில் கேம்ஸ் விளையாடுவேன். இல்லையெனில் சில பாடல்கள் கேட்பேன். சில நேரங்களில் சீனியர் வீரர்களிடம் சென்று பேசுவேன். அப்போது அவர்கள் கொடுக்கும் அனுபவம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.” என்றார்.

Published by