பஞ்சாப் தவிர ஐ.பி.எலில் எனக்கு மிகவும் பிடித்த அணி இதுதான் – மயாங்க் அகர்வால்

0
509
Mayank Agarwal

பஞ்சாப் கிங்ஸ் அணி 2022 ஐ.பி.எலுக்கு மயாங்க் அகர்வால் மற்றும் அர்ஷதீப் சிங்கை தக்கவைத்துக் கொண்டு நட்சத்திர வீரர்கள் கே.எல்.ராகுல், பூரன், ஷமி போன்றோரை விடுவித்தது. ராகுல் தலைமையில் 4 வருடங்களில் ஒருமுறை கூட பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்தது. 90 சதவீத ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு விட்டு கடைசி நிமிடங்களில் சுதப்பி வெற்றியை நழுவி விடுவர். இதனால் கடைசி 2 சீசனில் 6வது இடத்தில் முடித்தனர்.

அடுத்த ஆண்டு பஞ்சாப் அணியை அகர்வால் வழிநடத்த உள்ளார். இதற்கு முன் கே.எல்.ராகுல் இல்லாத பட்சத்தில் இவர் அணியை தலைமை தாங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான அப்போட்டியில் அவர் அதிரடியாக ஆடி 106 ரன்கள் குவித்தார். இருப்பினும் பஞ்சாப் அப்போட்டியில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய அகர்வால் அன்று தன் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். ஐ.பி.எல் தொடரில் மயாங்க அகர்வால் 100 போட்டிகளில் 2131 ரன்கள் அடித்துள்ளார். அதில் 1 சதம் மற்ற 11 அரை சதங்கள் அடங்கும். 135.47 எனும் சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.

மயாங்க் அகர்வால் 2011ஆம் ஆண்டு ஐ.பி.எலில் களம் பதித்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியப் பிறகு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 2 ஆண்டுகள் ( 2014 – 2016 ) பங்கேற்றார். 2017இல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ்க்கு டிரேட் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவ்வணிக்காக 3 போட்டிகளில் மட்டுமே களமிறங்கினார். அவருடைய மோசமான ஃபார்ம் காரணமாக பிளேயிங் லெவனில் அவர் தேர்வாகவில்லை. 2018 மெகா ஏலத்தில் பிரீத்தி சிந்தா இவரை வாங்கினார். இதுவரை பஞ்சாப் அணிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

பேட்டி ஒன்றில், “ பஞ்சாப் தவிர உங்களுக்கு பிடித்த ஐ.பி.எல் அணி எது ? ” என்ற கேள்விக்கு அவர் சற்றும் தயங்காமல் “ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ” என்று பதிலளித்தார். ஆர்.சி.பி அணிக்காக அவர் ஒரு சில மறக்கமுடியாத மேட்ச் வின்னிங் ஆட்டங்களில் பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -