பர்த்டே பார்ட்டியில் நேர்ந்த மேக்ஸ்வெல்-க்கு நேர்ந்த சோகம்; கிரிக்கெட் விளையாட முடியாதாம்!

0
541

பிறந்தநாள் பார்ட்டியின்போது மேக்ஸ்வெல் காலில் பலமாக அடிபட்டுள்ளது. இதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவரே பதிவிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் இருந்தது. இங்கிலாந்து அணியும் 6 புள்ளிகள் பெற்று இருந்தது. ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணி அட்வாண்டேஜ் பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

- Advertisement -

துரதிஷ்டவசமாக போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.

அதன் பிறகு, தனது 34 ஆவது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடி இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். அப்போது துரதிஷ்டவசமாக கீழே விழுந்ததில் அவரது மூட்டு பகுதியில் அடிபட்டு இருக்கிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

- Advertisement -

வருகிற நவம்பர் 17ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. இத்தொடரில் மேக்ஸ்வெல் இடம் பெற்று இருக்கிறார். தற்போது அவர் நீக்கப்பட்டு மாற்று வீரராக சியான் அபௌட் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தனது பார்மை திரும்ப பெற்றிருக்கும் மேக்ஸ்வெல் இப்படி முக்கியமான தருணத்தில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகி இருப்பது ஆஸ்திரேலியாவிற்கு சற்று பின்னடைவை தந்திருக்கிறது. காயத்தின் தீவிரம் பற்றி தற்போது வரை கூறப்படவில்லை. குறைந்தது மூன்று முதல் ஐந்து மாதங்கள் இவர் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் தெரிகிறது.

இங்கிலாந்து தொடர் முடிவுற்றவுடன் ஆஸ்திரேலியா அணி வருகிற பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் உலகக்கோப்பைக்கான திட்டத்தில் மேக்ஸ்வெல்-க்கு முக்கிய இடம் இருக்கிறது என்று தேர்வு குழு அதிகாரி, ஜார்ஜ் பெய்லி கூறினார்.

அவர் கூறுகையில், “மேக்ஸ்வெல் ஒரு சிறந்த மனிதர். சிறந்த விளையாட்டு வீரர். அவருக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. லிமிடெட் ஓவர் போட்டிகளில் எங்களது திட்டத்தில் அவருக்கும் இடம் உண்டு. அடுத்த உலகக் கோப்பைக்கும் எங்களது திட்டத்தில் அவர் இருப்பதால் தொடர்ச்சியாக அவர் குணமடைவதற்கு போதிய ஆதரவையும் மருத்துவ உதவியும் நாங்கள் கொடுப்போம்.” என்றார்.