மேக்ஸ்வெல் அதிவேக சத உலக சாதனை.. 2வது பகுதியில் 13 பந்தில் ருத்ர தாண்டவம்.. ஆஸ்திரேலியா ரன் குவிப்பு!

0
1630
Maxwell

தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் டெல்லி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. துவக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் 15 பந்துகளுக்கு 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து டேவிட் வார்னர் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு வேகமாக ரன்கள் கொண்டுவர ஆரம்பித்தார்கள். ஸ்மித் 68 பந்துகளில் 71 ரன்கள், டேவிட் வார்னர் 93 பந்தில் 14 ரன்கள் என ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல அடித்தளம் கொடுத்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து வந்த லபுசேன் அவர் பங்குக்கு 47 பந்தில் 62 ரன்கள் எடுத்தார்.
ஜோஸ் இங்லீஷ் 14 மற்றும் கேமரூன் கிரீன் 8 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஒரு சிறிய நெருக்கடி உருவானது.

இந்த நிலையில் உள்ளே வந்த கிளன் மேக்ஸ்வெல் அவருடைய வழக்கமான பாணியில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட ஆரம்பித்தார். கேப்டன் கம்மின்சை வைத்துக் கொண்டு 27 பந்தில் அரைசதம் அடித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மேக்ஸ்வெல் ஆட்டத்தில் இன்னும் சூடு பிடித்தது மேற்கொண்டு 13 பந்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதிரடியாக 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து, உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற உலகச் சாதனையை படைத்தார்.

இறுதியாக மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் கம்மின்ஸ் ஆட்டம் இழக்காமல் 12 ரன்கள் எடுத்திருக்க 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா அணி 399 ரன்கள் குவித்தது. லோகன் வான் பீக் 10 ஓவர்களுக்கு 74 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள்.

மேக்ஸ்வெல் 40 பந்துகள்
மார்க்ரம் 49 பந்துகள்
கெவின் ஓ பிரையன் 50 பந்துகள்
மேக்ஸ்வெல் 51 பந்துகள்
ஏபி.டிவில்லியர்ஸ் 52 பந்துகள்