மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடினால் அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் நிச்சயம் – மேத்யூ வேட் நம்பிக்கை

0
2009
Mathew Wade about Tim David in MI

நேற்று நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சிங்கப்பூர் அணியைச் சேர்ந்த டிம் டேவிட்டை 8 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றியது. டி20 போட்டிகளில் பொருத்தவரையில் இதுவரை அவர் 85 போட்டிகளில் விளையாடி 1908 ரன்கள் குவித்துள்ளார். டி20போட்டிகளில் இவருடைய பேட்டிங் ஆரேஜ் 34.69 மற்றும் ஸ்டிரைக் ரேட் 159.39 ஆகும்.

டி20 போட்டியில் அதிரடியாக கடைசி நேரத்தில் களமிறங்கி பினிஷராக நிறைய அணிக்கு டிம் டேவிட் விளையாடி கொடுத்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த ஆண்டு வரை ஹர்திக் பாண்டியா மற்றும் கீரோன் பொல்லார்ட் ஆகியோர் பினிஷர் பேட்ஸ்மேன்களாக விளையாடி வந்தனர்.

ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இந்த ஆண்டு களமிறங்க இருப்பதால் அவருக்கு பதிலாக அவருடைய இடத்தில் டிம் டேவிட்டை விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்துள்ளது. அதன் காரணமாகவே அதிக தொகைக்கு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடினால் அவருக்கு ஆஸ்திரேலியாவில் வாய்ப்பு கிடைக்கும்

கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவும் நிலையில் இருந்த பொழுது, விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மிக அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முதல் ஐசிசி டி20 உலக கோப்பை கோப்பையை கைப்பற்றியது.

நடந்து முடிந்த மெகா ஏலத்தில் குஜராத் அணி அவரை 2 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. குஜராத் அணி தன்னை கைப்பற்றியது தனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும், குஜராத் அணிக்கு தன்னுடைய முழு பங்களிப்பை அவர் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அந்த அணி ரசிகர்களுக்கு கூறியிருந்தார்.

தன்னை குஜராத் அணி கைப்பற்றியது குறித்து பேசிய மேத்யூ வேட், டிம் டேவிட் குறித்தும் ஒரு சில வார்த்தைகள் பேசி இருந்தார். “டிம் டேவிட் சமீப நாட்களாகவே டி20 போட்டிகளில் தொடர்ந்து நன்கு அதிரடியாக விளையாடி வருகிறார். நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் சிறப்பாக விளையாடி விட்டால், நிச்சயமாக ஆஸ்திரேலிய அணி அவரை இந்த ஆண்டு உலக கோப்பை டி20 தொடரருக்கு சேர்த்துக் கொள்ளும். ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தின் கண் பார்வையில் அவர் தற்போது உள்ளார் என்றும் கூறி முடித்தார்.

ஆஸ்திரேலிய அணியில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் கொடிகட்டி பறக்கும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபஸ்சாக்னே தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். ஆனால் தற்பொழுது அவர் ஆஸ்திரேலியா அணியில் சக்கை போடு போட்டு வருகிறார். அதேபோல சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் ஆஸ்திரேலிய அணி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.