டி20 உலகக் கோப்பை 2024

கோலி இந்த வேலையை கண்டிப்பா செய்வார்.. கவலைப்பட வேண்டாம் – கவாஸ்கர் பேச்சுக்கு பின் ஹைடன் பேட்டி

டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின்தேர்வு பற்றி இருக்கும் விவாதங்களின் அளவுக்கு, விராட் கோலியின் டி20 கிரிக்கெட் பேட்டிங் பற்றிய விவாதங்களும் இருக்கிறது. தற்பொழுது இது குறித்து மேத்யூ ஹைடன் முக்கியமான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பற்றி கிரிக்கெட் வர்ணனையிலிருந்து பேசக்கூடியவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். குளிர்சாதன பெட்டி அறையில் இருந்து பேசுபவர்களுக்கு இங்கு நிலவும் சூழ்நிலை தெரியாது என கூறியிருந்தார். மேலும் இதைத்தான் 15 வருடமாக கிரிக்கெட்டில் செய்து வருவதாகவும் பேசி இருந்தார்.

இந்த நிலையில் கவாஸ்கர் இதற்கு பதில் அளித்து பேசும் பொழுது தங்களுக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது எனவும், அப்படியே இருந்தாலும் கூட தாங்கள் எதைப் பார்க்கிறோமோ அதைத்தான் பேசுகிறோம் எனக் கூறி இருந்தார். மேலும் 14 முதல் 15 ஓவர்கள் விளையாடிய 118 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒருவர் ஆட்டம் இழந்து வெளியேறினால், அதற்கு கைதட்டுவார்கள் என்று விராட் கோலி எதிர்பார்க்கக் கூடாது எனவும் விமர்சனம் செய்திருந்தார்.

தற்பொழுது விராட் கோலி ஐபிஎல் தொடரில் 148 ஸ்ட்ரைக் ரேட்டில் 500 ரன்கள் குவித்து சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். இது டி20 கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரர்களின் ஸ்டிரைக் ரேட் ஆக இருக்கிறது. தற்பொழுது டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் அணுகுமுறை குறித்து மேத்யூ ஹைடன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து அவர் கூறும் பொழுது ” இப்பொழுது ஸ்ட்ரைக் ரேட் சரியான திசையில் இருக்கிறது. நடுவில் அது 120க்கு வந்தது. பின்பு 130, 140 கடந்து தற்பொழுது 150க்கு வந்திருக்கிறது. இது டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பான ஒரு ஸ்ட்ரைக் ரேட் ஆகும். விராட் கோலி மூன்றாவது இடத்தில் வருவாரா? துவக்க இடத்தில் வருவாரா? என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் ஆறு ஓவர்களில் விராட் கோலி இருந்தால் பட்டாசு வெடிக்கப் போகிறது.

இதையும் படிங்க : மேட்சுக்கு முன்னாடி அவர் ஒரு விஷயத்தை சொன்னார்.. அதுதான் எல்லாத்துக்கும் காரணம் – துஷார் தேஷ்பாண்டே பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகள் உங்களுக்கு தெரியும். நியூயார்க் சூழ்நிலைகள் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் நான் அந்த மைதானங்களை பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருக்கிறது. இந்தியாவுக்கு மேற்கிந்திய சூழ்நிலை மிகவும் சிறப்பானதாக இருக்கும். தங்களிடம் அடித்து விளையாடும் சிறந்த அணி இருப்பதை விராட் கோலி உணர்ந்து, உள்ளே வந்து அடித்து நொறுக்க போகிறார்” என்று கூறியிருக்கிறார்.

Published by