தமிழக மலிங்காவின் வீடியோவை பகிர்ந்து பாராட்டிய இலங்கையின் குட்டி மலிங்கா

0
220

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் காயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு சரிவை உருவாக்கிவிட்டது என்றே கூறலாம். ஆடிய பதினான்கு போட்டிகளில் நான்கை மட்டுமே வென்று எட்டுப் புள்ளிகளோடு ஒன்பதாவது இடத்தையே பெற்றனர்!

மெகா ஏலத்தில் 15 கோடி கொடுத்து வாங்கிய ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் குணம் ஆகாததால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மணிக்கு 145 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர், தொடரின், சென்னை அணியின் முதல் போட்டியில் பந்துவீசியதோடு காயத்தால் தொடரிலிருந்து வெளியேறிவிட்டார்.

- Advertisement -

இந்தப் இருவரின் காயங்கள்தான் சென்னை அணியின் சரிவுக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்தது. சென்னை அணியில் இருந்த மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுபவம் கிடையாது; ஜோர்டான், பிராவோ, ப்ரட்டோரியஸ் போன்றவர்களுக்கு வேகம், ஸ்விங் கிடையாது. இவர்களால் பவர்-ப்ளேவில் வீச முடியாது. இந்த ஆண்டு ஐ.பி.எல் நடந்த மும்பை, நவிமும்பை, புனே மைதானங்கள் ஸ்விங்கிற்கும், வேகத்திற்கும் சிறப்பாய் ஒத்துழைத்தது. இதைப் பயன்படுத்த சென்னை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாது போய்விட்டனர்!

இந்த நிலையில்தான் ஒருபோட்டியில் மட்டுமே விளையாடி காயமடைந்த ஆடம் மில்லே காயம் குணமாகாத காரணத்தால் தொடரைவிட்டே வெளியேற, அவருக்குப் பதிலாக இலங்கை அன்டர் 19 அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரணாவை சென்னை அணி, அவரது அடிப்படை விலையான இருபது இலட்சத்திற்கு அணிக்குள் கொண்டுவந்தது.

மதிஷா பதிரணா அவர் நாட்டின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் குறிப்பாக டி20 கிரிக்கெட்டின் சாதனை வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்காவின் பாணியில் பந்து வீசக் கூடியவர். இவர் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கடைசி இரண்டு ஆட்டங்களில் வாய்ப்பைப் பெற்று இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இவர் முதல் போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றி அசத்தி இருந்தார். இவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் கணிப்பதில் சிரமம் இருக்கிறது என்று தோனி பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் பெரியசாமி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய வீடியோவை பகிர்ந்து, ஹீ இஸ் குட் என்று தலைப்பிட்டு இருக்கிறார். பெரியசாமியும் லசித் மலிங்காவின் பாணியில் பந்து வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் ஆவார். மதிஷா பதிரணா இந்தக் காரணத்தால் அவரது வீடியோவை பகிர்ந்து பாராட்டி இருக்கிறார்!