குட்டி மலிங்கா எனும் பதிரானாவுக்கு இலங்கை அணியில் இடம் – குவியும் பாராட்டுகள்

0
414
Matheesha Pathirana bowling like Lasith Malinga

நடப்பு ஐ.பி.எல் தொடர் சென்னை அணிக்கு 2020 ஆண்டை விட மோசமான ஆண்டாக அமைந்திருக்கிறது. மொத்தம் 14 லீக் போட்டிகளில் பத்து ஆட்டங்களைத் தோற்று, ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறிதோடு, புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்கள் சென்னை அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்குப் பின்னால் உள்ளது. ஆடுகளத் தன்மை மற்றும் மைதான சூழலைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது. கேப்டன்சி குழப்பங்கள். மிக முக்கியமாக முக்கிய வீரர்கள் காயத்தால் தொடரை விட்டே வெளியேறியது, சென்னை அணியின் சரிவை அதிகமாக்கி, ஐ.பி.எல் தொடரில் இந்த சீசனை மோசமான சீசனாய் உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்தியா வந்திருந்த வெஸ்ட் இன்டீஸ் தொடரில் காயமடைந்திருந்த, ஏலத்தில் சென்னை அணி 15 கோடி கொடுத்து எடுத்திருந்த தீபக் சஹார் தொடரின் பாதிக்கு மேல் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் காயம் குணமடையாததோடு தொடரை விட்டும் வெளியேறியது, சென்னை அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங்கின் கூர்மையை மழுங்கடித்து விட்டது. அடுத்து முதல் ஆட்டத்தோடு காயத்தால் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும், தொடரிலிருந்து வெளியேற, சென்னை அணியின் பாஸ்ட் பவுலிங் யூனிட் தடம் புரண்டுவிட்டது.

தீபக் சஹாருக்குப் பதிலாய் அனுபவ வீரர் இஷாந்த் சர்மாவை சென்னை அணி உள்ளே கொண்வரலாம் என்று பலர் எதிர்பார்க்க, சென்னை அணியோ யாரையும் தீபக் சஹாரின் இடத்திற்குக் கொண்டுவரவில்லை. அடுத்து ஆடம் மில்னேவும் காயமடைய, அவரின் காயம் குணம் அடையுமா என்று பொறுத்துப் பார்த்த சென்னை அணி நிர்வாகம், அவரின் காயம் குணமாகததால், அவரின் இடத்திற்கு இலங்கையின் அன்டர் 19 பாஸ்ட் பவுலர் “பேபி மலிங்கா” மதீஷா பதிரணாவை ஒப்பந்தம் செய்துள்ளது. வாய்ப்பு கிடைத்த முதல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். இதில்லாமல் இவரைப் பற்றி தோனி வெகுவாகப் புகழ்ந்து, இவர் சென்னை அணியின் வருங்கால திட்டத்தில் முக்கிய வீரராக இருப்பார் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது!

சென்னை அணி இவரை தேர்ந்தெடுத்து விளையாட வைத்ததில் இவர் பாஸ்மார்க் வாங்க, இலங்கை அணி அடுத்து ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் தற்காலிக இலங்கை அணி அறிவிப்பில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவல் வெளிவந்ததும், சென்னை அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் “ஸ்லிங்கா ஆக்சன் மீண்டும் வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அவரது தேசிய அணியில். இலங்கை அணியில் ட்வென்ட்டி ட்வென்ட்டி அணியில் இடம் பிடித்ததிற்குப் பாராட்டுகள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது!

- Advertisement -