ஆசிய கோப்பை இந்த அணிக்கு தான், இவர் தான் டாப் ஸ்கோர் எழுதி வச்சுக்கோங்க – ஷென் வாட்சன் உறுதி!

0
283

ஆசிய கோப்பை வெல்லப்போவது இந்த அணிதான் என்று உறுதியாக கூறி வருகிறார் உசேன் வாட்சன்.

15வது ஆசிய கோப்பை தொடர் இம்முறை ஆறு அணிகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. துவக்கத்தில் இலங்கையில் நடத்தப்பட இருந்தது. அங்கு நிலவி வரும் பொருளாதார சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. 2016 ஆம் ஆண்டு டி20 ஆசிய கோப்பை தொடர், 2018 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான ஆசிய கோப்பை தொடர் என தொடர்ச்சியாக இரண்டையும் இந்திய அணி வெற்றி பெற்றது. இம்முறை டி20 தொடராக ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி பலம் மிக்கதாக காணப்படுகிறது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சில் முக்கியமான வீரர் இல்லாததால், பின்னடைவாக இருக்கிறது. மேலும் இம்முறை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட ஐந்து அணிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய அணிகளில் ஏதேனும் ஒன்று குவாலிஃபயர் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில், துவக்க போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்காக தான் பலரும் காத்திருக்கின்றனர்.

இம்முறை நடத்தப்பட இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் யார் கோப்பையை வெல்வார்? யார் சிறப்பாக செயல்படுவார்? பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் யார் யார் ஜொலிப்பார்கள்? என பலரும் பல்வேறு கணிப்புகளை தெரிவித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், இம்முறை யார் கோப்பையை வெல்வார்? மற்றும் பேட்டிங்கில் யார் சிறப்பாக செயல்படுவார்? என்பது குறித்து தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில்,

- Advertisement -

“எனது கணிப்பு இந்திய அணி தான். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி எப்படி செயல்படும் என்பதை பொறுத்து வாய்ப்புகள் மாறலாம். ஆனால் நிச்சயம் இந்திய அணி அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இந்த தொடரை கைப்பற்றும் என நம்புகிறேன். இளம் வீரர்கள் மிகத் துடிப்புடன் இருக்கின்றனர். சமீபத்தில் அவர்களின் செயல்பாடு உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்தத் தொடரில் விராட் கோலி அபாரமாக செயல்படுவார் என நினைக்கிறேன். ஆசிய கோப்பை தொடரில் அவர் பல சாதனைகளை படைத்திருக்கிறார். மிகுந்த அனுபவத்தையும் கொண்டிருக்கிறார். தனது பழைய பார்மை மீட்டெடுப்பதற்கு இது சரியான தொடராக அமையும். மேலும் உலகக்கோப்பைக்கும் இது உதவும் என்பதால் இம்முறை அவர் அனைவரின் கவனத்திலும் இருப்பார்.” என்றார்.

முதல் முறையாக மிகப்பெரிய தொடருக்கு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பேற்று வழிநடத்துகிறார். கோப்பையை வெல்ல அவர் மிகுந்த ஆவலோடும் இருக்கிறார். இந்திய அணி இதுவரை ஏழு முறை கோப்பையை வென்றது. ஆசிய கோப்பை வரலாற்றில் இது அதிகபட்சமாக இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் இலங்கை அணி 5 முறையும் வென்றிருக்கிறது. கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் டி20 தொடராக நடத்தப்பட்டது. தற்போது இரண்டாவது முறை டி20 தொடராக நடத்தப்பட்டிருக்கிறது.