ரோகித் சர்மாவின் டி20 உலகச்சாதனையை முறியடித்த மார்டின் கப்தில் !

0
580
Rohit sharma t20

இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அங்குச் சுற்றுப்பயணம் செய்திருந்த நியூசிலாந்து, அந்த டெஸ்ட் தொடரை 0-3 என மோசமாகத் தோற்றது. பிரன்டன் மெக்கல்லம் பயிற்சியின் கீழ், பென் ஸ்டோக்ஸின் தலைமையின் கீழ் எழுச்சி பெற்ற இங்கிலாந்து அணியை நியூசிலாந்தால் சமாளிக்க முடியவில்லை.

இதையடுத்து நியூசிலாந்து அணி அயர்லாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் நியூசிலாந்து அணியே வென்றது. கேப்டன் கேன் வில்லியசம்னுக்கு ஓய்வளிக்கப்பட்டது இருந்தது!

- Advertisement -

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து அருகிலுள்ள அயர்லாந்தோடும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடியது போலவே, அங்கிருக்கும் இன்னொரு கிரிக்கெட் நாடான ஸ்காட்லாந்து அணியுடனும் டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது!

இந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி இருபது ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களோடு 101 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து எளிதாய் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது!

இந்த ஆட்டத்தில் இன்னொரு நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் புதிய உலகச்சாதனை ஒன்றை டி20 கிரிக்கெட்டில் படைத்தார். இவர் டி20 போட்டிகளில் அதிக ரன் அடித்துள்ள ரோகித் சர்மாவின் சாதனையை முந்தினார். ரோகித் சர்மா 3379 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். தற்போது மார்டின் கப்தில் 3399 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்!

- Advertisement -

இந்திய அணியின் ரன் மெசின் விராட்கோலி 51 என்ற பேட்டிங் ஆவ்ரேஜோடு 99 போட்டிகளில் 3308 ரன்களோடு மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 2894 ரன்களுடன் நான்காவது இடத்திலும், ஆஸ்திரேலியா வொய்ட்-பால் கேப்டன் ஆரோன் பின்ஞ் 3855 ரன்களோடு ஐந்தாவது இடத்திலும் உள்ளார். வெஸ்ட் இன்டீஸ் அணியோடு அடுத்து இந்திய அணி ஐந்து டி20 போட்டிகளில் மோத உள்ளதால், ரோகித் சர்மா மீண்டும் அதிக ரன் அடித்தவர்களில் முதலிடத்தை எட்டலாம்!