இந்திய கிரிக்கெட்

நான் 150 கிமீ வீசியும் கூட.. இந்த 3 இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டி விட்டுட்டாங்க – மார்க் வுட் பேட்டி

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தான் பந்து வீச சிரமப்பட்ட மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட்டில் பந்து வீசக்கூடியவராக மார்க் வுட் இருந்து வருகிறார். இந்திய தொடரில் பங்கேற்காத அவர் அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான புகழ்பெற்ற ஆர்எஸ்எஸ் தொடருக்கு தயாராகி வருகிறார்.

அவரது பேட் அகலமாகிவிடும்

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தான் பந்து வீசியதில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் வேகத்தை பொருட்படுத்தாமல் மிகவும் சாதாரணமாக தன்னை எதிர் கொண்டு விளையாடி உள்ளதாக மார்க் வுட் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் முதலில் ரோஹித் சர்மா என்று கூறுவேன். ஷார்ட் பந்து விளையாடுவதில் அவர் மிகச்சிறந்தவர். அப்படி ஒரு பதில் எனக்கும் அவரை அவுட் செய்வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும். ஆனால் அவருடைய நாளாக இருந்தால் அவரை எதுவுமே செய்ய முடியாது. அந்தப் பந்தை சாதாரணமாக அடித்து நொறுக்கி விடுவார். அப்போது அவருடைய பேட் அகலமாகி கொண்டு செல்வது போல இருக்கும்”

- Advertisement -

இந்த இருவரும் அப்படிதான்

“இதற்கு அடுத்து முக்கியமானவர் விராட் கோலி. அவர் மிகவும் திறமையான பேட்ஸ்மேன். அவருக்கு வெளியில் செல்லும் பந்தில் பலவீனம் உள்ளது என்பது போல நம்மை நினைக்க வைத்தவர். ஆனால் அப்படிப்பட்ட பந்தை நான் வீசிய பொழுது அவர் ஒருபோதும் தவறவிட்டது கிடையாது”

இதையும் படிங்க : தோனி இல்லை.. எனக்கு உதவியது இந்த முன்னாள் சிஎஸ்கே வீரர் தான்.. கலீல் அகமது நெகிழ்ச்சி

“இதற்கு அடுத்து முக்கியமானவர் ரிஷப் பண்ட். அவர் கணிக்க முடியாதவராக இருப்பதால் நீங்கள் அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினமானது. மேலும் அவருக்கு எதிராக ஒரே மாதிரி பந்து வீச முடியாது. அவர் பந்தை எதிர்கொள்வதற்கு மிகவும் உறுதியாக இருப்பார். அந்த நேரத்தில் அவரால் பந்தை தான் விரும்பும் இடத்திற்கு அடிக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by