இந்திய டூருக்கு இந்த பையனை கூட்டிட்டு போங்க; இவன்கிட்ட என்னமோ இருக்கு! – மார்க் வாக் கணிப்பு!

0
517
Mark Waugh

நம்பர் ஒன் டி20 தொடரான இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டில் பிக்பேஷ் டி20 லீக் நடத்தி வருகிறது!

தற்போது இந்த தொடர் கடந்த மாதத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் ஆகும். இது ஆஸ்திரேலியா கிரிக்கெட்கான மிக முக்கியக் காலம். இந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் முக்கியமான தொடர்களில் விளையாடும். எனவே இந்த காலகட்டத்தில் பெரிய வீரர்கள் இந்த தொடருக்கு கிடைக்க மாட்டார்கள். எனவே இந்தத் தொடருக்கு தற்பொழுது மக்களின் வருகை குறைந்து இருக்கிறது.

ஆனாலும் இதையெல்லாம் தாண்டி தொடர் முடிவை நெருங்க நெருங்க மக்கள் மீண்டும் மைதானத்திற்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். புதியதாக தொடருக்குள் வரும் சில வீரர்களின் செயல்பாடுகள் ரசிகர்களை மைதானத்துக்குள் கூட்டி வருகிறது. அப்படி ஒரு வீரராக 25 வயதான இடது கை சுழற் பந்துவீச்சாளர் டூலி இருக்கிறார்.

இவர் இதுவரை ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் பெர்த் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை ஒரே ஆட்டத்தில் வீழ்த்தி அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது இவர் குறித்து மார்க் வாக் கூறும் பொழுது ” நான் இங்கு ஒரு முக்கியமான வீரரை பற்றி பேசப் போகிறேன். அவர் இடது கை சுழற் பந்துவீச்சாளர் பாட்டி டூலி. அவர் இடது கை சுழற் பந்துவீச்சாளராக இருந்தாலும் ஒரு மர்மம் அவரது பந்துவீச்சில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவரிடம் சில பந்து வீச்சு தந்திரங்கள் இருக்கின்றன அது உங்களுக்கு இந்திய பேட்ஸ்மன்களுக்கு எதிராக தேவைப்படும் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் துல்லியமாக பந்து வீசுகிறார் மேலும் ஸ்டம்பை நோக்கி சரியாக வீசுகிறார். அவர் உங்களுக்கு முழுமைக்கும் போதும்!” என்று இந்திய சுற்றுப்பயணத்திற்கு இந்த வீரரை அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று கூறி இருக்கிறார்!

தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிட்னி மைதானத்தில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் கூறும்பொழுது இந்த மைதானம் இந்திய மைதானங்களுடன் கொஞ்சம் தொடர்பு கொண்டது போலானது. இன்று வேகப்பந்து வீச்சும் ரிவர்ஸ் ஸ்விங்கும் வரப்போகிறது. இதை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். நாங்கள் அங்கே அதிக ஸ்பின் ஓவர்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதைப்போலவே இந்த மைதானத்திலும் அதிக சுழற் பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இங்கு கேப்டனாக இருப்பது மற்ற இடங்களில் கேப்டனாக இருப்பதற்கு சற்று வித்தியாசமானது” என்று தெரிவித்திருக்கிறார்!