33 ரன்களுக்கு ஆல்-அவுட்; 6 பேர் டக்! ஆசியகோப்பையில் நடந்த சுவாரஸ்யமான மேட்ச்!

0
524

பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் மலேசியா அணி 33 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதன் ஆறு பேர் டக் அவுட்.

2022 ஆம் ஆண்டு பெண்களுக்கான ஆசிய கோப்பைத் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 14வது போட்டியில் இலங்கை பெண்கள் அணி மற்றும் மலேசியா பெண்கள் அணி மோதின.

- Advertisement -

அக்டோபர் 8ம் தேதி காலை 8.30 மணி அளவில் துவங்கிய இப்போட்டி கிட்டத்தட்ட 10.30 மணிக்குள் முடிந்துவிட்டது. முதலில் டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு இலங்கை பெண்கள் அணி 105 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ரணசிங்கே 23 ரன்கள் அடித்திருந்தார். அதற்கு அடுத்ததாக நிலாக்சி டீசல் வா மற்றும் அத்தப்பட்டு இருவரும் தலா 21 ரன்கள் அடித்திருந்த நேரம்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மலேசியா பெண்கள் அணி இலங்கை வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே நடையை கட்டினர். யாரேனும் ஒருவர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவரும் களத்தில் நிற்கவில்லை. 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மலேசியா பெண்கள் அணி. இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை பெண்கள் அணி வெற்றி பெற்று நல்ல ரன் ரேட் உடன் புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது.

மலேசிய பெண்கள் அணியில் எல்சா ஹண்டர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்திருக்கின்றனர். குறிப்பாக ஆறு வீராங்கனைகள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளனர். பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்நிகழ்வு மோசமான சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

- Advertisement -

14 போட்டிகளின் முடிவில் ஆசிய கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில், நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது இந்திய அணி. அதற்கு அடுத்ததாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் முறையே தலா 6 புள்ளிகளை பெற்றிருந்தாலும், இரண்டரை அடிப்படையில் ஒன்றன்பின் மற்றொருவர் இருக்கின்றனர். 5 போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி மலேசியா பெண்கள் அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக, அக்டோபர் 8ம் தேதி மதியம் 1 மணியளவில் துவங்கும் பதினைந்தாவது போட்டியில் இந்திய பெண்கள் அணி வங்கதேச பெண்கள் அணியை எதிர்கொள்கிறது.