எனது கனவு டி20 அணியின் முதல் 5 வீரர்கள் இவர்கள் தான் – மகேல ஜெயவர்த்தனே தேர்வு செய்த வீரர்கள்

0
4095
Mahela Jayawardene T20

கிரிக்கெட் உலகம் முழுவதும் 20/20 கிரிக்கெட் போட்டிகளின் காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கிறது. காரணம் உலகின் நம்பர் 1 20/20 கிரிக்கெட் லீக் ஐ.பி.எல் நடந்து வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 20/20 உலகக்கோப்பை நடக்க போகிறது. இந்தக் காய்ச்சல் கிரிக்கெட் இரசிகர்களையும் தாண்டி, பிரபலமான பல முன்னாள் வீரர்களையும் தாக்கி இருக்கிறது.

சிலபல முன்னாள் வீரர்கள் தங்களின் கனவு ஐ.பி.எல் அணிகளை வெளியிட்டு இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னால் 360 டிகிரி ஏ.பி.டிவிலியர்ஸ் தன் கனவு ஐ.பி.எல் அணியை வெளியிட்டார். முகம்மத் கைஃப்பும் வெளியிட்டிருந்தார். இருவரின் அணியிலும் மகேந்திர சிங் தோனிதான் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

சம கிரிக்கெட் காலத்தில் சச்சினுக்கு இணை வைக்கக்கூடிய சாம்பியன் பேட்ஸ்மேன்கள் என்றால், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங்குக்கு அடுத்து, இந்த வரிசையில் இடம்பெறக் கூடியவர்கள் குமார் சங்கக்கராவும், மஹேல ஜெயவர்த்தனேவும் ஆவார்கள்.

இதில் மஹேல ஜெயவர்த்தனே இலங்கை அன்டர் 19 அணிக்கு உத்வேகமளிக்க மென்டராக போவதில் இருந்து, உலகின் நம்பர் 1 ட்வென்டி ட்வென்டி அணியான மும்பைக்கு வெற்றிக்கரமான பயிற்சியாளராக இருப்பது, இங்கிலாந்தின் 100 பந்து போட்டித்தொடரின் சாம்பியன் செளதர்ன் ப்ரேவ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பது என எப்போதும் பரபரப்பாகவும், கிரிக்கெட்டோடும் தொடர்ந்து இருக்கக் கூடியவர்.

கிரிக்கெட் ஹால் ஆப் பேமில் இடம்பெற்ற லெஜன்ட்டும், 20/20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய மிகச்சிறந்த பயிற்சியாளராக விளங்கி மஹேல ஜெயவர்த்தனே, ஆறு வீரர்களை 20/20 போட்டிக்கான வீரர்களாக தேர்ந்தெடுத்து, தனது கனவு அணியின் ஒருபாதியை வெளியிட்டிருக்கிறார்.

1. ரசீத்கான்

சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் ஏழாவதாக பேட் செய்யவும் கூடியவர் என்று இடமளித்திருக்கிறார்.

2. ஷாகின் ஷா அப்ரிடி

புதுப்பந்தில் மிகச்சிறப்பாக ஸ்விங் செய்யும் விக்கெட் டேக்கர் என்பதால் சேர்த்திருக்கிறார்.

3. ஜஸ்ப்ரீத் பும்ரா

ஆட்டத்தின் எல்லாப் பகுதியிலும் பந்துவீசக் கூடிய மற்றும் விக்கெட் டேக்கர் என்பதால் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

4. முகம்மத் ரிஸ்வான்

இவரை விக்கெட் பேட்ஸ்மேனாக எடுத்திருக்கிறார். ஆனால் இவர் மிடிலில் பரபரப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் என்று தெரிவித்திருக்கிறார். ஓபனிங்கில் இடமளிக்கவில்லை.

5. ஜோஸ் பட்லர்

தற்போது ஐ.பி.எல்-லிலும் கடந்த 20/20 உலகக்கோப்பையிலும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டதால் துவக்க வீரராகக் கொண்டுவந்திருக்கிறார்.

6. கிறிஸ் கெயில்

2007 20/20 உலகக்கோப்பையில் செளத்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த செஞ்சுரியே இவரை இன்னொரு துவக்க வீரராக எடுக்க போதுமானதாக இருந்திருக்கிறது.