இது இந்திய அணி மாதிரியே இல்ல.. இதுக்கு யார் காரணம்.. முன்னாள் வீரர் சரமாரி கேள்வி

0
320

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் வங்கதேசம் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா , வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இல்லாதது தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டார். வீரர்கள் முழு உடல் தகுதியை பெறாதது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் அமர்ந்து தவறுக்கு என்ன காரணம் என்று பார்க்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டினார்.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் இந்த பேச்சு பிசிசிஐ வட்டாரத்தில் புயலை கிளப்பியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீர மதன்லால், கேப்டன் ஒரு விஷயத்தில் குறை கூறுகிறார் என்றால் நிச்சயம் ஏதேனும் ஒரு இடத்தில் தவறு நடக்கிறது என்று அர்த்தம் .காயமடைந்த வீரர்கள் ஏன் அணியில் இடம் பெறுகிறார்கள்? இதற்கு யார் பொறுப்பு? காயம் அடைந்த வீரர்கள் ஏன் முழு உடல் தகுதியை பெறுவதில்லை. இதற்கு தேசிய கிரிக்கெட் அகாடமியிலுள்ள பயிற்சியாளர்கள் பொறுப்பு எடுத்துக் கொள்வார்களா?

வீரர்கள் சர்வதேச கிரிக்கட் தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள கூடாது. உங்களுக்கு ஓய்வு தேவை என்றால் ஐபிஎலில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாடு தான் முக்கியம். இந்திய அணி சரியான திசையை நோக்கி செல்லவில்லை. நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியை பார்த்து வருகிறேன். ஒரு உத்வேகம் இல்லாமலேயே விளையாடி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இது இந்திய அணியை போலவே  தெரியவில்லை.

நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று வெறி எந்த ஒரு வீரிடம் காணவில்லை. இதற்கு வீரர்கள் உடல் மிகவும் சோர்ந்து போய் இருக்கலாம். இல்லை வீரர்களின் மனசு வேற எங்கோ இருந்திருக்க வேண்டும். இது இரண்டுமே இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று மதன்லால் கூறியுள்ளார். இந்திய வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -