கோடிக்கணக்கான பணத்தை காட்டி கே எல் ராகுல் மற்றும் ரஷித் கானை குறி வைக்கும் லக்னோ அணி – கடும் கோபத்தில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத்

0
148
Lucknow Teams demands Rashid Khan and KL Rahul

அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் கோலாகலமாக இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஒரு ஐபிஎல் தொடராக அடுத்த ஆண்டு நடைபெற போகிறது. இதற்கு முந்தைய வருடங்களில் நடந்த ஐபிஎல் தொடர் போல இல்லாமல் அடுத்த வருடம் புதிய 2 அணிகள் ( அகமதாபாத் மற்றும் லக்னோ ) களம் இறங்க மொத்தமாக 10 அணிகள் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கின்றனர்.

அனைத்து அணிகளுக்கும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக பழைய அணிகள் தங்களுடைய வீரர்கள் பட்டியலில் இருந்து ஏதேனும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்து இருந்தது. தக்க வைக்கப் போகும் வீரர்கள் பட்டியலை அறிவிப்பதற்கான கடைசி நாள் நாளையுடன் முடிவுக்கு வர இருக்கின்றது.

- Advertisement -

எனவே நாளை அனைத்து அணிகளும் தங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்கள் பெயர்களை அறிவிக்கும் என்று எதிர் பார்க்கலாம். இதற்கு இடையில் புதிய அணியாக களம் இறங்கப் போகும் லக்னோ அணி பஞ்சாப் வீரர் கேஎல் ராகுல் மற்றும் ஹைதரபாத் வீரர் ரஷித் கான் இடம் ஒரு வியாபார டீல் பேசி இருக்கிறது. இந்த செய்தியை அறிந்த பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணி கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளன.

20 மற்றும் 16 கோடி ரூபாய்க்கு டீல் பேசிய லக்னோ அணி நிர்வாகம்

டி20 கிரிக்கெட் பார்மெட்டில் மிக சிறப்பான ஃபார்மில் இருக்கும் வீரர்களில் கேஎல் ராகுல் மற்றும் ரஷித் கான் மிகவும் முக்கியமான வீரர்கள். பஞ்சாப் அணி கே எல் ராகுலையும் ஹைதராபாத் அணி ரஷீத் கானையும் எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியது. இவர்கள் இருவருள் கேஎல் ராகுல் மெகா ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. அதேசமயம் ஹைதராபாத் அணி தன்னை முதல் வீரராக தக்க வைக்க வேண்டும் என்று ரஷித் கான் வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் வெளியாகியது.

இதற்கு இடையில் லக்னோ அணி நிர்வாகம் கேஎல் ராகுலை 20 கோடி ரூபாய்க்கும் ரஷித் கானை 16 கோடி ரூபாய்க்கும் டீல் பேசி இருக்கும் விஷயம் தற்போது கசிந்துள்ளது. மிகப்பெரிய தொகைக்கு இவர்களிடம் டீல் முடித்து லக்னோ அணியில் இவர்கள் இருவரையும் விளையாட வைக்கும் முயற்சியில் அந்த அணி நிர்வாகம் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த செய்தியை அறிந்த ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணி நிர்வாகங்கள் லக்னோ அணி நிர்வாகம் மீது பிசிசிஐ இடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் அடுத்தடுத்து தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்