மார்க் வுட்டுக்கு பதிலாக ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்துள்ள லக்னோ அணி – ரசிகர்கள் உற்சாகம்

0
24
Mark Wood Replacement LSG

நடந்து முடிந்த மெகா ஏலத்தில் லக்னோ அணி நிர்வாகம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை 7 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு கைப்பற்றியிருந்தது. ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதற்கு முன்பாக முழங்கை காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவருக்கு தகுந்த மாற்று வீரரை லக்னோ அணி நிர்வாகம் தேடி வந்தது. தற்பொழுது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆன்ட்ரூ டை அவருக்கு மாற்று வீரராக நடத்த இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட போவதாக தற்போது தகவல் உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர்களில் ஆண்ட்ரூ டை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு குஜராத் அணியில் விளையாடினார். அதன் பின்னர் 2018 மட்டும் 2019 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணியும் பின்னர் 2020 மட்டும் 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் விளையாடினார். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் 182 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 251 விக்கெட்டுகளை தன் கைவசம் வைத்திருக்கிறார். டி20 போட்டிகளில் அதிகமாக விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது. குறிப்பாக டெத் ஓவர்களில் மிக சிறப்பாக பந்து வீசும் திறமை இவரிடம் இருப்பதால், லக்னோ அணிக்கு நிச்சயமாக இவர் முக்கியமான நேரங்களில் பெரிய அளவில் அந்த அணிக்கு கை கொடுப்பார் என்று நாம் நம்பலாம்.

லக்னோ அணியில் தற்பொழுது இந்திய வேகப்பந்து வீச்சாளர்களாக அங்கிட் ராஜ்புட், ஆவேஷ் கான், மயங்க் யாதவ் மற்றும் மோஷின் கான் ஆகியோர் இருக்கின்றனர். வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக தற்பொழுது ஆண்ட்ரூ டை மற்றும் இலங்கையைச் சேர்ந்த துஷ்மந்த சமீரா இருப்பது குறிப்பிடத்தக்கது.

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி அதனுடைய முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை வருகிற மார்ச் 28ம் தேதியன்று எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.