ஹைதராபாத், லக்னோ, ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றும் வீரர்கள் லிஸ்ட்!

0
12891

ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய மூன்று அணிகள் வெளியேற்றும் வீரர்களின் விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல்-க்கு தொடருக்காக வருகிற டிசம்பர் மாதம் நடக்கும் ஏலத்திற்கு முன்பு, ஒவ்வொரு அணியும் வீரர்கள் பரிமாற்றம் முறையின் மூலம் சில வீரர்களை வேறு அணிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் வருகிற நவம்பர் 15ஆம் தேதி ஆகும். அதற்குள் இந்த பரிமாற்றம் மற்றும் அதன் ஒப்பந்தத்தின் முழு விவரங்களை ஐபிஎல் நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

டிசம்பர் மாதம் நடக்கும் ஏலத்தில், அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்த வீரர்கள் என பலரும் பங்குபெறுவர். இதிலிருந்து தேவையான வீரர்களை அணிகள் எடுத்துக் கொள்ளலாம். இப்படியான வழிமுறை இந்த ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்ற உள்ள வீரர்களின் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரரான தேவ்தத் படிக்கல்லை வெளியேற்றுகிறது. பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த இவரை கடந்த ஐபிஎல் ஏலத்தில் பெற்றது.

- Advertisement -

படிக்கல்லுக்கு தற்போது 22 வயது ஆகிறது. இன்னும் நிறைய ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடலாம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவரை எடுத்தது. ஆனால் தற்போது இவரை வெளியேற்றுவதாக தகவல்கள் வந்திருப்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் அணி இரண்டு வெளிநாட்டு வீரர்களான ஜேசன் ஹோல்டர் மற்றும் மார்க்கஸ் ஸ்டாயினிஸ் இருவரையும், இந்திய வீரர் மணிஷ் பாண்டேவையும் வெளியேற்றுகிறது. இதன் மூலம் அந்த அணிக்கு கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை ஏலத்திற்கு முன்பு கிடைக்கும்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு முக்கிய வீரர்களை வெளியேற்றுவதாக தகவல்கள் வந்திருக்கிறது. 14 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைக்கப்பட்ட கேப்டன் கேன் வில்லியம்சன் அணியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது. மேலும் மற்றொரு நட்சத்திர வீரர் மற்றும் அவ்வபோது கேப்டனாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரானை வெளியேற்ற உள்ளதாக வெளியான தகவல்களால் சற்று அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.