இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான திலகரத்னே தில்சன் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை இலங்கை அணிக்காக படைத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தற்போது அவரது மகளும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள அண்டர் 19 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணியில் தேர்வாகி இருக்கிறார்.
இலங்கை அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த தில்சன் இலங்கை சர்வதேச அணிக்காக 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,492 ரன்கள், 330 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10 ஆயிரத்து 290 ரன்களும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 1889 ரன்களும் குவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 52 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி 1153 ரண்களும் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய ஏராளமான போட்டிகளை இலங்கை அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரது மகளான லிமன்சா திலகரத்னே வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளோடு நடைபெற உள்ள U19 முத்தரப்பு தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு தேர்வாகி இருக்கிறார். இந்த தொடர் ஆனது டி20 மற்றும் 50 ஓவர் என இரண்டு வடிவங்களில் நடைபெற உள்ளது.
லிமன்சா இந்த தொடரில் விளையாடுவதற்கு சில சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவற்றை சரி செய்து தற்போது வருகிற 20-ம் தேதி களம் இறங்க உள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் விளையாடுவதற்கு கடந்த 2022ஆம் ஆண்டு விக்டோரியா அணிக்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
பதினாறு வயதிலேயே ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட தனது மகள் குறித்த தில்சன் இது ஒரு பெருமையான தருணமாக அமைந்துள்ளது, எனது மகள் கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு மைல் கல்லை கடந்திருக்கிறார். 16 வயதுக்குட்பட்டோருக்கான விக்டோரியா அணிக்கு விளையாட தேர்வான தனது மகளுக்கு வாழ்த்துக்கள் என்று மகிழ்ச்சியான தருணத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார்.
இதையும் படிங்க:களத்தில் இந்த இந்திய வீரரோடு மோதுவது ரொம்ப பிடிக்கும்.. அதுக்கு ஸ்பெஷலா ஒரு காரணம் இருக்கு – லபுஷேன் பேட்டி
எனது தற்போது அண்டர் 19 இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பாக விளையாடி பல்வேறு சாதனைகள் படைப்பார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிறைய கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகள் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் தற்போது தில்சனின் மகளும் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.