கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் அவர்களது குடும்பத்தில் அல்லது உறவினர்கள் மத்தியில் அவர்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாட வந்து இருப்பார்கள். ஆனால் ஒரு சில சமயங்களில் ஒரே குடும்பத்தில் அல்லது சொந்தங்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட ஒருவருக்கும் மேற்பட்ட வீரர்கள் வந்து இருப்பார்கள்.
உதாரணத்திற்கு நமது இந்தியாவில் விளையாடிய பதான் சகோதரர்கள் பாண்டியா சகோதரர்கள் போனதே ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு பின்னால் சில கதைகள் ஒளிந்துள்ளது. அவர்களது உறவினர்களும் ஒருவகையில் கிரிக்கெட்டுக்கு நெருங்கியவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
1. தினேஷ் கார்த்திக் மற்றும் சூசன் இட்டிசெரியா
Random Trivia :
— The Cricket Philosopher 🌈 (@outof22yards) June 4, 2021
The only Son in law and Mother in law duo to play International Cricket are Dinesh Karthik and Susan Itticheria who played Cricket for India in 1976.
தினேஷ் கார்த்திக் 2004-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னுடைய முழு திறமையை காண்பிக்கும் ஒரு வீரர். தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பாக பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கார்த்திக் உடைய மனைவி தீபிகா பள்ளிகல் ஸ்குவாஷ் வீராங்கனை ஆவார்.
நமக்கு தெரிந்திராத ஒரு விஷயம் தீபிகா அவர்களுடைய அம்மா சூசன் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். ஆம் அவர் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் மூலமாக தினேஷ் கார்த்திக் அத்தையும் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பது தற்போது தெரியவந்துள்ளது
2. பாபர் அசாம் மற்றும் அக்மல் சகோதரர்கள்

தற்போது பாகிஸ்தான் அணிக்காக மிக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் பாபர் அசாம் பாகிஸ்தான் நாட்டுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பரிசு என்று நாம் கூறலாம். அந்த அளவுக்கு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். நிறைய பேருக்கு தெரிந்த ஒரு விஷயம் ஒரு சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அது என்னவென்றால் கம்ரன் மற்றும் உமர் அக்மல் சகோதரர்கள் உடைய நெருங்கிய சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆச்சரியபடும் விதமாக, இவர்கள் அனைவரும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிருக்கு நெருங்கிய சொந்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3. மிட்செல் ஸ்டார்க் & அலிஸா ஹீலி
ஆஸ்திரேலிய அணியில் மிக வேகமாக பந்து வீச கூடிய பந்துவீச்சாளர்கள் மத்தியில் ஒரு தலைசிறந்த வீரர் மிட்செல் ஸ்டார்க். குறிப்பாக உலக கோப்பை தொடர்களில் வரும் ஆஸ்திரேலிய அணிக்காக மிக சிறப்பாக பந்து வீசியது நம் அனைவருக்கும் தெரியும்.
இவருடைய மனைவி ஹீலி இவரைப் போலவே மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். மிகச் சிறப்க பேட்டிங் விளையாடக்கூடிய இவர் சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய அணிக்காக 4,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
அதே சமயம் நமக்கு தெரிந்திராத மற்றொரு செய்தி என்னவென்றால் மிட்செல் ஸ்டார்க் கூடிய சகோதரர் பிராண்டன் ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணிக்காக உயரம் தாண்டும் வீரர் ஆவார். ஆஸ்திரேலியா அணிக்காக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இவர் ஒரு தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. முஷ்பிக்குர் ரஹிம் மற்றும் மகமதுல்லா

வங்காளதேச அணியைச் சேர்ந்த முஷ்பிக்குர் ரஹிம் மற்றும் அகமதுல்லா ஆகிய இருவரும் பல போட்டிகளில் வங்காளதேச அணிக்காக மிக சிறப்பாக விளையாடி வரக்கூடிய வீரர்கள். இவர்கள் இருவரும் கிரிக்கெட் போட்டி தாண்டி நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் நெருங்கிய சகோதரர்கள் ஆவார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பங்களாதேஷ் அணிகள் மிக சிறப்பாக விளையாடி வருவது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
5. இம்ரான் கான் மற்றும் மிஸ்பா உல் ஹக்
பாகிஸ்தான் அணியை தலைமைதாங்கி உலக கோப்பை தொடரை வாங்கிக்கொடுத்த வரும் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் பிரதமருமான இம்ரான்கான் பாகிஸ்தான் அணிக்காக பல போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு ஜாம்பவான் வீரர்.
அதேசமயம் மிஸ்பா பாகிஸ்தான் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி தற்போது பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு ஆச்சரிய படும் விஷயம் என்னவென்றால் இம்ரான்கான் உடைய தூரத்து சொந்தம் மிஸ்பா என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவார்கள். ஒரு குடும்பத்தில் இருந்து வந்த இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணிக்காக பெயர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மிக சிறப்பாக விளையாடியது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.