கிரிக்கெட்டில் பலர் அறியாத 8 விதிமுறைகள்

0
61396
Dhoni and Kohli

உலகம் முழுவதும் பிரபலமாக கொண்டாடப்படும் விளையாட்டு கிரிக்கெட் தான்.அதிலும் நம் இந்திய நாட்டில் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஒரு தனி மதிப்பு உள்ளது.நம்மில் சிலருக்கு இந்தக் கிரிக்கெட் வியாதி இரத்தத்தில் ஊறிப் போன ஒன்று.கிரிக்கெட் வெறி உள்ள அனைவருக்கும் கிரிக்கெட்டைப் பற்றிய அறிவு இயல்பாகவே இருக்கும்.

ஆனால் பலருக்கு அப்படி அமைவது இல்லை.கிரிக்கெட் பார்க்கும் அனைவரும் அந்த விளையாட்டைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்புவர்.எனினும்,எல்லா குறிப்புகளையும் தெரிந்துக் கொள்ள நம் அறிவு துல்லியமாக இருக்காது.

கிரிக்கெட்டில் பலருக்குத் தெரியாத 8 விதிமுறைகளைக் பற்றிப் பின்வருமாறு பார்ப்போம்.

1. மன்கன்டிங் விதிமுறை :

வினோ மன்கன்ட் எனும் பழம்பெரும் கிரிக்கெட்டரின் பெயருக்குப் பின் இந்த விதிமுறை பெயரிடப்பட்டது.மன்கன்டிங்,சர்ச்சைக்குரிய விதிமுறையாக மட்டுமில்லாமல் கிரிக்கெட்டைச் சீர்குலைக்கும் ஒரு விதிமுறையாகவும் எண்ணப்படுகிறது.

பந்து வீசும் முன்பு ‘ நான் – ஸ்டிரைக்கர் ‘ பேட்ஸ்மேன் அவரது எல்லைக் கோட்டைத் தாண்டினால் பந்துவீச்சாளர் அவரது அருகாமையில் இருக்கும் ஸ்டெம்பின் பெயிலை உயர்த்த வேண்டும்.அப்படிச் செய்தால் அந்தப் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படுவார்.இதுவே மன்கன்டிங் ஆகும்.

2. மூன்று நிமிட விதிமுறை :

ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தப் பின் அவருக்கு அடுத்த வீரர் உடனே களம் இறங்க வேண்டும்.அடுத்து வரும் வீரர் குறிப்பிட்ட மூன்று நிமிடத்திற்குள் களம் இறங்கவில்லை என்றால் அவரும் ஆட்டமிழந்ததாகவே கருதப்படுவார்.

3. கேப் விதிமுறை :

இந்த விதிமுறை,கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஆடை அல்லது தொப்பி போன்றவற்றிக்குத் தொடர்புடையது.பேட்ஸ்மேன் அடித்தப் பந்து,ஃபீல்டர்கள் அணிந்துக் கொண்டிருக்கும் தொப்பியைத் தொட்டப் பிறகு எவரேனும் அந்தக் கேட்சைப் பிடித்தால் அது கணக்கில் சேர்கப்படாது.

ஆனால் தற்செயலாக இப்படி நடந்தால்,அந்தக் கேட்சைக் கொடுத்த பேட்ஸ்மேன் நடையைக் கட்ட வேண்டியிருக்கும்.

4. பந்தைக் கையாளுதல்:

பேட்ஸ்மேன்களின் மாட்டையின் நுனியில் பட்டு,அந்தப் பந்து ஒருவேளை ஸ்டெம்பை நோக்கிச் செல்லாம்.அந்தச் சூழ்நிலையில் அவர் அந்தப் பந்தைத் தன் கையால் தொடக் கூடாது.

அந்தப் பேட்ஸ்மேன் தான் உபயோகிக்கும் மட்டையை வைத்தோ அல்லது தன் காலை வைத்தோ அந்தப் பந்தைத் தடுக்கலாம்.

5. ஆப்ஜக்ட் ஹிட்டிங் விதிமுறை :

பேட்ஸ்மேன் அடித்த பந்து ஸ்டேடியத்தின் மேல் கூரையைத் தொட்டால் அந்தப் பந்து ‘ டெட் பால் ‘ என்றே கணக்கிடப்படும்.அதுமட்டுமில்லாமல்,ஸ்பைடர் கேமரா அல்லது மற்ற எந்தப் பொருளையாவது சேதப்படுத்தினாலும் அது ‘ டெட் ‘ பாலாகவே எண்ணப்படும்.

ஆகையால் பந்துவீச்சாளர் அந்தப் பந்தை மீண்டும் வீச வேண்டும்.

6. அப்பீல் விதிமுறை :

பந்துவீச்சாளர் அல்லது அவருடைய சக வீரகள் முறையிட்டால் மட்டுமே களத்தில் நின்று கொண்டு இருக்கும் நடுவர்,தன் முடிவை அறிவிக்க முடியும்.அப்படி அவர்கள் முறையிடாத பட்சத்தில் ஒருவேளை அந்தப் பேட்ஸ்மேன் அவுட் ஆகி இருந்தால் கூட,அந்த நடுவர் அவரது விரலை உயர்த்தக் கூடாது.

7. கால் பேக் விதிமுறை :

ஒரு பேட்ஸ்மேன் தன் விக்கெட்டை இழந்திருந்தாலும்,எதிரணிக் கேப்டனின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் வந்து விளையாடலாம் என்பதைக் ‘ கால் பேக் ‘ விதிமுறை குறிக்கிறது.இந்த நிலை அவ்வப்போது ஏற்படாது.நியாயமற்ற வழிகளில் பேட்ஸ்மேன் வெளியேறும் போது,இந்த விதிமுறை பயன்பாட்டிற்கு வரும்.

8. பெனால்டி விதிமுறை :

பேட்ஸ்மேன் பவுண்டரிக்கு விரட்டிய பந்து எதிரணி விக்கெட் கீப்பர் வைத்திருக்கும் ஹெல்மெட்டைத் தொட்டால்,பேட்டிங் செய்யும் அணிக்கு 5 போனஸ் ரன்கள் அளிக்கப்படும்.கிரிக்கெட்டில் இந்த விதி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.