டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து இவர் விலகவேண்டும்; அதைப்பண்ண வேற வீரர்கள் இருக்கிறார்கள் – அப்ரிடி பேட்டி!

0
1647

கேப்டன் பொறுப்பை துறந்துவிட்டு இனி பேட்டிங்கில் மூலம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேப்டனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் சாகித் அப்ரிடி.

டி20 உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதி போட்டி வரை சென்று இங்கிலாந்து அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதே பெரிய சிக்கலாக இருந்தது. நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதால் மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு கிடைத்து, அதை வைத்து இறுதிப்போட்டி வரை சென்றது.

இத்தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், அவர்களை கேப்டன் கையாண்ட விதம் சரியாக இல்லை என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. மேலும் தனிப்பட்ட பேட்டிங்கிலும் பாபர் அசாம் சரியாக செயல்படவில்லை என்பதால் கூடுதல் விமர்சனங்கள் வந்திருக்கிறது.

இந்நிலையில் பாபர் அசாம் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பை விட்டு விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று பேட்டி அளித்திருக்கிறார் சாகித் அப்ரிடி.

- Advertisement -

“கேப்டன் பொறுப்பில் இருக்கும் பாபர் அசாம் மிகுந்த அழுத்தத்தை உணர்வதாக தெரிகிறது. இதன் காரணமாக பேட்டிங்கில் இயல்பாக விளையாடி வரும் ஆட்டத்தை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறார். விரைவில் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு ஒரே தீர்வு அவர் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வது தான். அதன் பிறகு பேட்டிங்கில் என்ன குறை இருந்திருக்கிறது என்பதை அவர் சரி பார்க்க வேண்டும். பாபர் அசாம் விலகி விட்டால், அந்த கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு ரிஸ்வான், சதாப் கான் மற்றும் ஷான் மசூத் போன்ற வீரர்கள் இருக்கின்றனர்.” என்றார்.